வெங்கட்பிரபு-வுக்கு இவ்ளோ பெரிய மகளா..? – தீயாய் பரவும் புகைப்படம்..! – ரசிகர்கள் ஷாக்..!

வெங்கட்பிரபு ( Venkat Prabhu ) கஸ்டடி என்ற தெலுங்கு படத்தில், ஸ்ரீஷிவானி என்ற பெண் பாடலாசிரியர் அறிமுகமாகிறார். டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தின் நாயகனாக நாகசைதன்யா நாகார்ஜூனா நடிக்கிறார். இந்த படத்தின் மூலம், புதிய பாடல் ஆசிரியராக ஸ்ரீ ஷிவானி அறிவிக்கப்பட்டுள்ளார்.

மாநாடு, மங்காத்தா, மன்மத லீலை, சென்னை 28 பாகம் 1 மற்றும் 2, சரோஜா, கோவா, பார்ட்டி, மாசு என்கிற மாசிலாமணி, பிரியாணி, லாக்கப் உள்ளிட்ட பல படங்களை டைரக்ட் செய்தவர் வெங்கட் பிரபு. இதில் சில படங்கள் மெகா ஹிட் படங்களாக அமைந்தன. இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் மகன் இவர். மற்றொரு மகன் பிரேம்ஜி. இவரும் படங்களில் நடித்து வருகிறார். அதிலும், வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் தம்பிக்கு கட்டாயம் ரோல் உண்டு.

Image Source : Unkown

துவக்கத்தில்,சில படங்களில் வெங்கட்பிரபு நடித்தார். பிறகு சென்னை 28 என்ற படத்தை இயக்கினார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுத்த இந்த படம், மெகா ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து மங்காத்தா, கோவா, சரோஜா, லாக்கப், மாநாடு உள்ளிட்ட படங்களால், முன்னணி டைரக்டர்களில் ஒருவராக முன்னேறினார். இளைஞர்களின் மனம் கவரும் விதமாக, ஜாலியான படங்களை சென்னை 28, சரோஜா படங்களை தந்த வெங்கட்பிரபு, மங்காத்தா, மாநாடு போன்ற ஆக்ஷன் படங்களையும் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதில், லாக்கப் படம் இவரது இயக்கத்தில் பெரிய பாராட்டை பெற்றது.

Image Source : Unkown

தற்போது, இளையராஜா குடும்பத்தில் இருந்து மற்றொரு சினிமா வாரிசாக, வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீ ஷிவானி, பாடல் ஆசிரியராக, வெங்கட்பிரபு இயக்கும் படத்தில், பாடல் ஆசிரியராக அறிமுகமாகி உள்ளார். அந்த படத்தின் பெயர் கஸ்டடி, தெலுங்கில் எடுக்கப்படும் இந்த படத்தில், நாகசைதன்யா ஹீரோவாக நடிக்கிறார்.
இயக்கநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர், விருமன் படத்தில் நாயகியாக அறிமுகமானார். இப்போது, வெங்கட் பிரபுவின் மகள், பாடல் ஆசிரியராக அறிமுகமாகி இருக்கிறார். இப்படி, திரைத்துறையினரின் வாரிசுகள், சினிமா துறையில் தங்களது பங்களிப்பை தர வந்துகொண்டே இருக்கின்றனர்.

Image Source : Unkown

இளையராஜா – கங்கை அமரன் இருவருமே இசை அமைப்பாளர்கள், கங்கை அமரன், கரகாட்டக்காரன் போன்ற வெற்றிப்படத்தை இயக்கியவர். வெங்கட்பிரபுவும் தன்னை சிறந்த இயக்குநர் என தன்னை நிரூபித்து வருகிறார். அந்த வரிசையில், சினிமா குடும்பத்தின் வாரிசாக, பாடல் ஆசிரியராக ஸ்ரீஷிவானி, அறிமுகமாகி இருக்கிறார்.

Image Source : Unkown

ஏற்கனவே தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர் தாமரை, முத்திரை பதித்த பல பாடல்களை தந்து அசத்தி இருக்கிறார். அந்த வகையில், வெங்கட் பிரபுவின் மகளும், சிறந்த கவிஞராக பாடல் ஆசிரியராக தனது திறமையை வெளிப்படுத்துவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …