மாயாண்டி குடும்பத்தார் பட ஹீரோயினா இது..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்களேன்..!

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து பிறகு காணாமல் போனவர்தான் நடிகை பூங்கொடி. பூங்கொடி நிறைய திரைப்படங்களில் எல்லாம் நடிக்கவில்லை. ஆனால் அவர் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் கிராமத்து கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களாக இருந்தன.

இவரும் ஆள் பார்ப்பதற்கு கிராமத்து பெண் போலவே இருந்ததால் தொடர்ந்து கிராமம் சார்ந்த திரைப்படங்களில் இவரை நடிக்க வைத்தனர். 2007 இல் வெளியான வீரமும் ஈரமும் என்கிற தமிழ் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் பூங்கொடி.

தமிழ் சினிமாவில் அறிமுகம்:

பூங்கொடி தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு மலையாளத்தில் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். அதன் மூலம்தான் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் வீரமும் ஈரமும் திரைப்படத்தில் நடித்த பிறகு அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

ஆனாலும் கிராமம் சார்ந்த குறைந்த பட்ஜெட் திரைப்படங்களில் நடிப்பதற்கு அப்பொழுது ஒரு கதாநாயகி கிடைத்துவிட்டார் என்று இயக்குனர்கள் நினைத்தனர். தொடர்ந்து பூங்கொடிக்கு வாய்ப்புகள் வரத் துவங்கின அதனை தொடர்ந்து மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், மிளகா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் பூங்கொடி.

மாயாண்டி குடும்பத்தாரில் வாய்ப்பு:

மாயாண்டி குடும்பத்தார் மற்றும் மிளகா திரைப்படங்களில் முக்கிய கதாநாயகியாக இவர் நடித்திருந்தார். மற்ற திரைப்படங்களில் கூட இவரது கதாபாத்திரம் சின்ன கதாபாத்திரமாகதான் இருந்தது.

ஆனால் மிளகா திரைப்படத்தைப் பொறுத்தவரை அந்த திரைப்படம் மொத்தமாக நகர்வதற்கு காரணமான கதாபாத்திரமாக பூங்கொடி இருந்தார். நல்லபடியாக நடிப்பை வெளிப்படுத்திய போதும் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் என்பது தொடர்ந்து வரவில்லை.

இதனை தொடர்ந்து வினோத் என்னும் ஒளிப்பதிவாளரை காதலித்து வந்தார் பூங்கொடி. வினோத் மிளகா திரைப்படத்தில் ஒளிபதிவாளராக பணியாற்றியவர் ஆவார். அந்த திரைப்படத்தின் படபிடிப்பு நடந்த பொழுது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் உண்டானது.

ஆனால் அவர்களது காதலுக்கு பூங்கொடியின் வீட்டில் பலமான எதிர்ப்பை இருந்து வந்தது. இருந்தாலும் தனது காதலனை கைவிட மனம் இல்லாத பூங்கொடி தனது வீட்டை விட்டு ஓடி சென்று அவருடன் திருமணம் செய்து கொண்டார்.

அதற்குப் பிறகு சினிமாவை விட்டும் முழுமையாக வெளியேறினார் பூங்கொடி. அதனை தொடர்ந்து சில பட வாய்ப்புகள் வந்தபோதும் கூட திருமணம் ஆனதால் அவர் அந்த திரைப்படங்களில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தற்சமயம் கேரளாவில் கணவன் மனைவியாக இருவரும் செட்டில் ஆகிவிட்டனர். இப்பொழுது பூங்கொடி எப்படி இருக்கிறார் என்கிற புகைப்படங்கள் கூட இணையத்தில் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version