சர்க்கரை கட்டுக்குள் இருக்க வேண்டுமா..? – இதை முயற்சி பண்ணுங்க..! – 100% ரிசல்ட்..!

மூலிகைகளின் வரிசையில் முக்கியமான மூலிகையாக திகழக்கூடிய நித்திய கல்யாணி ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை கண்ட்ரோல் செய்வதில் தற்போது முக்கிய பங்கு வகிப்பதாக பல ஆய்வுகள் தெரிவித்து உள்ளது.

ஆரம்ப நாட்களில் எந்த மூலிகை புற்று நோய்க்கு மட்டுமே அருமருந்தாக இருந்ததோடு உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கக்கூடிய தன்மை இருப்பதாக மருத்துவர்கள் கருதி வந்தார்கள்.

ஆனால் தற்போது இதன் இலைகள் மட்டுமல்லாமல் பூக்களையும் பயன்படுத்தி சர்க்கரை நோய்க்கான அருமையான மருந்தை நாம் தயாரிக்க முடியும்.

இந்த நித்யா கல்யாணி செடியில் இருக்கும் பூக்கள் பத்து முதல் 15 வரை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை நன்றாக கழுவி விட்டு இதனோடு ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்து விடுங்கள்.

 தற்போது இந்த சீரகம் மற்றும் பூக்களை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்த பிறகு அதை வடிகட்டி நீங்கள் தினமும் குடித்து வர ரத்தத்தில் உங்களுக்கு இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவு படிப்படியாக குறைந்து வரும் அதிசயத்தை நீங்களே உணர முடியும்.

அதுபோலவே சர்க்கரை நோயால் ஏற்படுகின்ற புண்களை ஆற வைக்க இந்த பூக்கள் அல்லது இலைகள் இரண்டையும் சமூலமாக எடுத்துக் கொண்டு அதை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இதன் பிறகு இதை வடிகட்டி அந்த எண்ணெயை ஆறாத புண்கள் மீது பூசலாம். இதன் மூலம் நாள்பட்ட சீழ் பிடித்த புரையோடிய புண்கள் அனைத்தும் விரைவில் குணமாகும்.

 எனவே பல்கி பெருகி வரும் இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள இதுபோன்ற இயற்கை முறைகளை நாம் பயன்படுத்தும் போது நமக்கு பக்க விளைவு ஏதும் ஏற்படாது.

 மேலும் ஆயுர்வேத நிபுணர்களின் கருத்துப்படி நித்தியகல்யாணியின் பூக்கள் மற்றும் இலைகள் இரண்டுமே ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்த கூடிய திறன் இருப்பதால் இதை ஒரு காலை தேநீராக நீங்கள் செய்து பருகலாம்.

சீன மருத்துவத்திலும் நித்தியகல்யாணியின் பயன் அதிகமாக உள்ளது. இந்த நித்திய கல்யாணி யில் ஆல்கலாய்டு  மற்றும் டானின்கள் அதிகமாக இருப்பதால் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தித் தரும்.

 மேலும் இந்த செடி உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம் இதன் இலைகளை உலர்த்தி அதை பொடி செய்து அந்த பொடியை நீங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம். இவை தற்போது நாட்டு மருந்து கடைகளில் அதிக அளவு கிடைக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …