ரிலீஸ் ஆகிறது வரலட்சுமி விஷால் நடித்த மத கஜ ராஜா..! அதுவும் எப்போன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் சி. அவரது முதல் திரைப்படமான முறைமாமன் திரைப்படத்தில் துவங்கி சுந்தர் சி இயக்கிய பெரும்பான்மையான திரைப்படங்கள் காமெடி திரைப்படங்கள்தான்.

அதற்கு நடுவே அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான வேறு மாதிரியான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் கூட தொடர்ந்து அவருக்கு அதிக வெற்றிகளை காமெடி திரைப்படங்கள்தான் கொடுத்திருக்கின்றன.

இதற்கு நடுவே சமீப காலமாக அரண்மனை என்னும் பேய் படத்தையும் இயக்கி வருகிறார் சுந்தர் சி. இந்த திரைப்படத்திற்கும் நல்ல வகையிலான வரவேற்பு கிடைத்து வருகிறது. சுந்தர் சி சில சமயங்களில் அதிக எதிர்பார்ப்புடன் ஒரு சில திரைப்படங்களை இயக்குவது உண்டு.

சுந்தர் சி எதிர்பார்ப்பு:

அப்படி இயக்கிய அந்த திரைப்படங்கள் அதிக வரவேற்பு பெறவில்லை என்றால் அது அவருக்கு அதிக மன வருத்தத்தை கொடுத்துவிடும் உதாரணத்திற்கு கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் திரைப்படத்தை அதிக எதிர்பார்ப்புடன் இயக்கினார் சுந்தர்சி.

அந்த திரைப்படமும் அதற்கு தகுதியான ஒரு திரைப்படம்தான் என்றாலும் கூட அப்போதைய ஆடியன்ஸுக்கு அந்த திரைப்படத்தின் மீது அவ்வளவாக ஆர்வம் இருக்கவில்லை. அதனால் வெளியான பிறகும் கூட அந்த திரைப்படம் பெரிதாக வெற்றியை காணவில்லை.

இதனை தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளான சுந்தர் சி அதற்குப் பிறகு சில வருடங்கள் திரைப்படங்களே இயக்காமல் இருந்து வந்தார். அந்த மாதிரியே சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இப்போது வரை வெளியாகாமல் இருக்கும் திரைப்படமும் உண்டு.

மதகஜராஜா:

அப்படியான ஒரு திரைப்படம்தான் விஷால் கதாநாயகனாக நடித்த மதகஜராஜா. இது முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். கலகலப்பை விட சிறப்பான ஒரு காமெடி திரைப்படமாக மதகஜராஜா இருக்கும்.

சுந்தர் சி யின் எண்ணமாக இருந்தது. பல பேட்டிகளில் சுந்தர் சி பேசும் பொழுது அவரிடம் நீங்கள் எடுத்த நகைச்சுவை திரைப்படங்களிலேயே சிறப்பான திரைப்படம் என்றால் எதை கூறுவீர்கள் என்று கேட்கும் பொழுது அதற்கு அவர் மகாராஜா ராஜாதான் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் தயாரிப்பாளருடன் இருந்த சில பிரச்சனைகள் காரணமாக அந்த திரைப்படம் வெளியாகாமலே இருந்து வந்தது. அந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வெகு வருடங்கள் ஆகிவிட்டன. இந்த திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனிதான் அப்பொழுது இசை அமைத்து இருந்தார்.

விஜய் ஆண்டனி அதிக பிரபலமாக இருந்த காலகட்டத்தில் அவர் இசையமைத்த படம் மதகஜராஜா. இந்த படத்தில் அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தனர். இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ஒரு பக்கம் சுந்தர் சி ரசிகர்களுக்கு ஆவல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் இந்த படம் வெளியாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வலம் வந்து கொண்டுள்ளன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version