ஆரம்பிக்கும் போதே பயங்கர சண்டை ஆகிடுச்சு.. என் முன் அப்படி பண்ணார்.. மறைந்த நடிகர் குறித்து எதிர்நீச்சல் மதுமிதா..!

சினிமாவில் நடிப்பதை போலவே, டிஆர்பி ரேட்டிங் அதிகமாக இருக்கிற ஒரு சீரியலில் நடித்து விட்டாலே போதும். தமிழக மக்கள் மத்தியில் வெகு சீக்கிரத்தில் பிரபலமாகி விடலாம்.

அப்படித்தான் இப்போது பல நடிகைகளில் சீரியலில் பிரபலமாகி, அடுத்து சினிமாவிலும் நடிக்க வந்து விடுகின்றனர். அதே போல், சினிமா நடிகைகளும் மார்க்கெட் சரிந்துவிட்டால் உடனே சீரியல் பக்கம் வந்து விடுகின்றனர்.

மதுமிதா

கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் நடிகை மதுமிதா. சன் டிவியில் பரபரப்பாக ஒளிப்பரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழி சீரியல்களிலும் மதுமிதா நடித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டில் கன்னட மொழியில் வெளியான ஜெய் ஹனுமான் புராணத் தொடரில் லட்சுமி தேவி கேரக்டரில் நடித்து, மக்கள் மத்தியில் அறிமுகமானவர்.

கோடலு சீரியலில்…

தொடர்ந்து 2019ம் ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியலில் நடித்து, தமிழக மக்கள் மனங்களில் இடம்பிடித்தார். பிறகு தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில், கோடலு என்ற சீரியலில் சரஸ்வதியாக நடித்தார்.

சில சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்த போதும் மதுமிதாவுக்கு நல்ல அறிமுகத்தை, வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது எதிர்நீச்சல் சீரியல்தான்.

அதிலும் மறைந்த நடிகர் மாரிமுத்து, ஆதிகுணசேகரன் என்ற கேரக்டரில் இந்த சீரியலில் வாழ்ந்திருந்தார். ‘இந்தாப்பா ஏய்’ என்ற அவரது டயலாக் டெலிவரி, அவரது டிரேடு மார்க் ஆக அமைந்தது.

மாரிமுத்து…

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லனாக, நல்ல குணச்சித்திர நடிகராகவும் திறமையை வெளிப்படுத்தி வந்த அவர், எதிர் நீச்சல் சீரியலில் ஆணி வேரான கேரக்டரில் மிக சிறப்பாக நடித்து, பட்டிதொட்டி எங்கும் மக்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

ஆனால் துரதிஷ்டவசமாக மாரிமுத்து, கடந்தாண்டில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் இப்போது நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். ஆனால், மாரிமுத்து அளவுக்கு இவரது நடிப்பு ஆழமாக இல்லை.

முதல் நாளே சண்டை…

நடிகர் மாரிமுத்துவுடன் நடித்த அனுபவங்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை மதுமிதா கூறியதாவது,

எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பிக்கும் போதே முதல் நாள் ஷூட்டிலேயே, எனக்கும் நடிகர் மாரிமுத்துவுக்கும் பயங்கர சண்டை ஆகிவிட்டது.

என் முன் சண்டை போடுவது போல் நடந்து கொண்டார். இனிமேல் இந்த ஆள் கூட பேசவே கூடாது என்றெல்லாம் இருந்தேன்.

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அவர் எவ்வளவு ஜாலியான மனிதர் என்று தெரிந்து கொண்டேன். அதன் பிறகு அவருடன் படப்பிடித்தளத்தில் ஒரே வேடிக்கையான சம்பவங்கள் தான் நடக்கும். மிகவும் தன்மையான மனிதர் என கூறியிருக்கிறார் எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version