நடிகர் விஜய்யின் ‘மதுர’ பட ஹீரோயினை நியாபகம் இருக்கா..? தளுக் மொழுக்குன்னு ஆளே மாறிட்டாங்களே!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத முன்னணி நடிகராக உருவெடுத்து இருக்கும் நடிகர் விஜய் பற்றி அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் அடுத்தடுத்து வந்த படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியைத் தந்து தமிழ் திரை உலகில் தனி இடத்தை பிடித்து தந்துள்ளது.

அண்மையில் லியோ படத்தில் நடித்திருந்த நடிகர் விஜய் அதனை அடுத்து புதிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் இவர் அரசியலிலும் களம் இறங்கிய விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

நடிகர் விஜய்..

இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளி வந்த மதுர திரைப்படத்தைப் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்த ஹீரோயின் ரக்ஷிதாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது இணையத்தில் வெளி வந்து வைரலாக மாறிவிட்டது.

இந்த புகைப்படங்களை நீங்கள் பார்த்தால் மலைத்துப் போவதோடு மட்டுமல்லாமல் மதுர படத்தில் நடித்த ஹீரோயினியா? என்று ஆச்சரியப்படக் கூடிய அளவு அவர் தோற்றம் உள்ளது என கூறலாம்.

மதுர பட ஹீரோயின் ரக்ஷிதா..

ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருந்த நடிகை ரக்ஷிதா சினிமா மார்க்கெட் இல்லாத காரணத்தால் சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

இவர் 2003 ஆம் ஆண்டு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் வெளி வந்த தம் என்ற படத்தில் ஹீரோயினியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். மேலும் இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

எனினும் தமிழில் எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் அக்கட தேசத்திற்கு சென்று செட்டிலாகி விட்ட அவர் அங்கு முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து ஸ்டார் நடிகையாக மாறினார்.

அந்த நிலையில் தான் இவர் 2004 ஆம் ஆண்டு மதுரா திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்து இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் மாடர்ன் உடையில் மெர்சலாக காட்சியளித்திருந்த இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்தார். எனினும் இவரது ஆசை நிராசையாய் போனது.

தளுக்கு மொழுக்கு போட்டோஸ்..

எனவே மீண்டும் அக்கட தேசத்திற்கு சென்று தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கவனத்தை செலுத்தி வந்த இவர் சினிமாவில் பீக்கில் இருந்த போது திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார்.

அந்த வகையில் தற்போது உடல் எடை கூடி தளுக்கு, மொழுக்கு என்று இவரது மேனி மாறிவிட்டது. மதுர படத்தில் ஸ்லிம்மாக பட்டைய கிளப்பிய ஹீரோயினியா? இது என்று கேட்கக்கூடிய அளவு தனது கொழு, கொழு உடலை பக்குவமாய் படம் எடுத்து இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்.

அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இது மதுர பட நாயகி ரக்ஷிதாவா? என்று ஆச்சரியத்தை கிளப்பி இருக்கிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தில் அவர் பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கிறார்கள் என்ற கருத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறாார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் அவரது உடல் எடை எந்த அளவுக்கு கூடியது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam