மனச மயக்கிட்டியேம்மா … நகைக்கடை திறப்பு விழாவிற்கு அழகு தேவதை போல் சென்ற மடோனா!

கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவரான நடிகை மடோனா ஜெபஸ்டின் மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கினார்.

இவர் முதல் முதலில் கடந்து 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார்.

மடோனா செபஸ்டியன்:

பிரேமம் திரைப்படத்தில் செலின் என்ற கேரக்டரில் மடோனா ஜெபஸ்டின் நடித்திருப்பார். இதில் மொத்தம் மூன்று நாயகிகள் .

அதாவது சாய் பல்லவி, அனுப்பமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா ஜெபஸ்டின் என மூன்று கதாநாயகிகள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள்.

அவர்கள் மூன்று பேருமே அறிமுக நாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலமாக 3 பேருக்குமே மாபெரும் வெற்றி படமாக பிரேமம் அமைந்தது .

அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் நடிக்க வந்த மடோனா செபஸ்டினுக்கு காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு சென்றது.

அந்த படத்தில் யாழினி என்ற கேரக்டரில் மிகச் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.

திரைப்படங்களில் மடோனா :

இதுதான் அவரது முதல் தமிழ் படம். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் இப்படி பலமொழி திரைப்படங்களில் நடித்து வந்தார் மடானா ஜெபஸ்டின்.

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கவன் திரைப்படத்தில் மலர் என்ற கேரக்டரில் நடித்தார். பிறகு தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த பவர் பாண்டி திரைப்படத்தில் பூத் தென்றல் என்ற ரோலில் நடித்து அறிமுகமானார் .

இந்த திரைப்படத்திலும் அவரது கதாபாத்திரம் அவ்வளவு சிறப்பாக. இருந்ததாக ரசிகர்கள் எல்லோரும் அவரை புகழ் பாராட்டினார்கள்.

பிறகு மீண்டும் விஜய் சேதுபதியின் ஜூங்கா திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் தோல்வி அடைந்து விட்டது .

தமிழ் படங்களில் மடோனா:

வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கமடா உள்ளிட்ட சில திரைப்படங்களில் தொடர்ச்சியாக மடோனா ஜெபஸ்டின் நடித்திருக்கிறார் .

தமிழ், மலையாளம் மொழி தமிழ் திரைப்படங்களில் அடுத்த அடுத்த நடித்து வந்த மடோனா செபஸ்டியன் தற்போதைய பிரபலமான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் திரைப்படத்துறையில் நடிக்க வருவதற்கு முன்னர் பின்னணி பாடகியாக தனது வாழ்க்கையை தொடங்கி சில திரைப்படங்களுக்கு பாடல்களும் பாடி இருக்கிறார்.

தேவதை போல் மடோனா:

இது அண்மையில் தான் எல்லோருக்குமே தெரியவந்தது. அது மட்டுமில்லாமல் அண்மையில் நடைபெற்ற திரைப்படவிழா ஒன்றில் மடோனா ஜெபஸ்டின் மிகச் சிறப்பாக பாடி தமிழ் ரசிகர்கள் கவர்ந்தார்.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவலை என்னவென்றால் நடிகை மடோனா ஜெபஸ்டின் பிரபல நடிகரான பிரசாந்துடன் இணைந்து கடை திறப்பு விழாவிற்கு சென்றிருக்கிறார்.

அப்போது அழகாக அலங்காரம் செய்து கொண்டு தேவதை போன்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்கள் எல்லோரது ரசனைக்கும் ஆளாகி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version