ராதை மனதில்… ராதை மனதில் என்ன ரகசியமோ…. ராதா லுக்கில் மனதை மயக்கிய மடோனா!

கேரளாவை சேர்ந்த பிரபலம் மலையாள நடிகையான மடோனா செபஸ்டியன் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார் .

மடோனா செபாஸ்டியன்:

முதன் முதலில் மலையாள மொழி திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .

இவர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக நடிகையாக அறிமுகமானார் .

அந்த திரைப்படத்தில் செலின் என்ற கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் .

இந்த திரைப்படத்தில் தான் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோ நடிகைகளாக அறிமுகமாகி இருந்தார்கள் .

“பிரேமம்” கொடுத்த அடையாளம்:

இந்த திரைப்படத்தின் மொத்தம் மூன்று கதாநாயகிகள் நடித்திருப்பார்கள். இதில் ஹீரோவாநா நிவின் பாலினின் மனைவியாக மடோனா நடித்திருப்பார்.

முதல் படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் மடோனா செபஸ்டினுக்கு அது பெரிய அடையாளமாகவே அமைந்துவிட்டது.

அதை அடுத்து தொடர்ச்சியாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத்துவங்கியது. மேலும் அப்படம் தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

அடுத்ததாக மடோனா ஜெபஸ்டின் இரண்டாவது படமே விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் .

இந்த திரைப்படத்தில் யாழினி என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தார். அதன் பிறகு மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கவண் திரைப்படத்தில் நடித்திருந்தார் .

பின்னர் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த பவர் பாண்டி திரைப்படத்தில் பூத்தென்றல் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார் .

அதை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜூங்கா திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கமடா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இப்படி தென்னிந்திய சினிமாவில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மடோனா செபஸ்டியன் பின்னணி பாடகி ஆகும் கூட திரைப்படத்துறையில் இருந்து வருகிறார்.

ராதை லுக்கில் மயக்கும் மடோனா;

இதனிடையே எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக ஏதேனும் பதிவிட்டு வருவது புகைப்படம் வீடியோ என வெளியிடுவதுமாக இருந்து வருகிறார் .

இந்த நிலையில் தற்போது இன்று கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு ராதை லுகில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது instagram-ல் வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் அவரது கண்களில் கண்ணனை தேடுவதாகவும்…. கண்ணனாக நாங்கள் வரவா? என கேட்டு அழகை ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள் . கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு இந்த புகைப்படங்கள் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version