“இட்லி, தோசைக்கு செம காம்பினேஷன் மதுரை தண்ணீர் சட்னி..! – டிஃபரண்டா இருக்க செய்யுங்க..!!

தினமும் இட்லி தோசைக்கு என்று பல வகையான சட்னிகளை நாம் செய்து சாப்பிட்டிருப்போம். தக்காளி சட்னி, கொத்தமல்லி சட்னி, கருவேப்பிலை சட்னி தேங்காய் சட்னி நிலக்கடலை சட்னி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில் இன்று மதுரை மாநகரில் செய்யக்கூடிய தண்ணீர் சட்னி அதுவும் உங்கள் வீட்டில் நீங்களே செய்து அசத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த சட்னியானது இட்லி மற்றும் தோசைக்கு செம காம்பினேஷன் ஆக இருக்கும். அது மட்டுமல்லாமல் இதனோடு சேர்ந்து தக்காளி சட்னியும் செய்து இரண்டையும் தொட்டுக் கொண்டு சாப்பிடும் போது எத்தனை இட்லி தோசை வயிற்றுக்குள் சென்றது என்பது எளிதில் யாரும் கண்டுபிடிக்க முடியாது.

மதுரை தண்ணீர் சட்னி செய்ய தேவையான பொருட்கள்

1.தேங்காய் துருவல் ஒரு கப்

2. 3 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை

3. வேர்க்கடலை 3 டேபிள்ஸ்பூன்

4.இஞ்சி ஒரு துண்டு 5.புதினா ஒரு கைப்பிடி அளவு

6.மல்லி இலை ஒரு கைப்பிடி அளவு

7.கருவேப்பிலை ஒரு கொத்து

8.உப்பு தேவையான அளவு

9.இரண்டு பல் பூண்டு

10.எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்

தாளிக்க

11.மூன்று வர மிளகாய் 12.கடுகு ஒரு டேபிள் ஸ்பூன்

13.தேவையான அளவு பெருங்காயம்

14.கருவேப்பிலை

செய்முறை

முதலில் அடுப்பில் வாணலியை வைத்து அதை சிறிதளவு எண்ணெயை ஊற்றி புதினா, கருவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு நீங்கள் துருவி வைத்திருக்கும் தேங்காய், பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை, உப்பு, இஞ்சி, பூண்டு போன்றவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு நீரை விட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வதக்கி வைத்திருக்கும் அந்த கலவையும் இதனோடு சேர்த்து அரைத்து அரை கப் அளவு தண்ணீரை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

இதனை அடுத்து தாலிக்க வாணலியில் நல்லெண்ணையை விட்டு வரமிளகாய். கடுகு கருவேப்பிலை பெருங்காயத்தூள் போன்றவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

 இவை நன்கு பொரிந்து வந்தவுடன் எடுத்து தண்ணீர் ஊற்றி இருக்கும் சட்னியில் கொட்டி விடுங்கள். இப்போது கூடுதல் மணத்தோடு சட்னி இருக்கும்.

இப்போது சுவையான மதுரை தண்ணீர் சட்னி தயார் இதை உங்கள் வீட்டிலேயே நீங்கள் செய்து நீங்கள் செய்யும் இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …