“சிவராத்திரி என்று உங்கள் வீட்டில் கட்டாயம் செய்ய வேண்டிய பூரண கொழுக்கட்டை…!” – எப்படி செய்வது பார்க்கலாம்..!

சிவ வழிபாட்டில் முக்கியமான திருநாளாக வருவது சிவராத்திரி இந்த சிவன் ராத்திரி இரவு முழுவதும் கண் விழித்திருந்து இரவு 3  யாமங்களில் பூஜையை செய்து இறையருளை பெறுவதற்காக அனைவரும் அன்றைய தினம் விரதம் இருப்பார்கள்.

 அப்படிப்பட்ட சிவன் ராத்திரி அன்று உங்கள் வீட்டில் சிவனுக்கு பிடித்த உணவு பண்டங்களை சமைத்து பூஜை அறையில் அவருக்கு பிரசாதமாக படைக்கலாம்.

 அப்படி பல வகைகளில் பல பிரசாதங்கள் செய்யப்பட்டு படைக்கப்பட்ட வருகிறது. இதில் குறிப்பாக கொழுக்கட்டையை மகா சிவராத்திரி  அன்று நெய்வேத்தியம் செய்யக்கூடிய வீடுகளில் ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட கொழுக்கட்டையை இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்

1.வெல்லம் ஒரு கப்

2.தேங்காய் இரண்டு கப்

3.நெய் தேவையான அளவு

4.ஏலக்காய் பொடி சிறிதளவு 5.கொழுக்கட்டை மாவு

6.உப்பு ஒரு சிட்டிகை

 செய்முறை

💐முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிதளவு நெய்யை விட்டு அதில் துருவி வைத்திருக்கும் தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய் பொடி இவற்றை சேர்த்து நன்கு கிளறி எடுத்துக் கொள்ள வேண்டும்.

💐 இதை பூரணம் என்று கூறுவார்கள் அதிகளவு இதனை சுருட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஓரளவு ஒன்றாக கலந்தாலே போதுமானது.

💐 இதனை அடுத்து கொழுக்கட்டை மாவுடன் ஒரு கப் வெண்ணீர் சேர்த்து மற்றும் உப்பு சேர்த்து நன்கு கட்டி சேராமல் பிசைந்து கொள்ளவும்.

💐 இதனை அடுத்து எந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து பின்பு அந்த உருண்டையை குழி செய்து குழியினுள் பூரணத்தை வைத்து கொழுக்கட்டை வடிவில் பிடிக்க வேண்டும்.

💐 இதுபோல மீதி மாவுகளில் பூரணத்தை வைத்து நிரப்பி விட்ட பிறகு இட்லி பாத்திரத்தில் இதை 15 நிமிடம் வைத்து வேக விட வேண்டும்  இப்போது மகா சிவராத்திரிக்கு சிவனுக்கு படைக்கக்கூடிய பூரண கொழுக்கட்டை ரெடி.

💐 நீங்களும் வருகின்ற சிவராத்திரி அன்று இந்த கொழுக்கட்டையை செய்து சிவபெருமானுக்கு படைத்து  நல்ல ஆசியை பெறுங்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Tamizhakam