மகா சிவராத்திரி..! – இதை மட்டும் பண்ணுங்க..! – உங்கள் வெற்றியை எவனாலும் தடுக்க முடியாது..!

 இந்த ஆண்டு வரக்கூடிய சிவராத்திரி ஒரு ஸ்பெஷல் சிவராத்திரி என்று ஜோதிட நிபுணர்கள் அனைவரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அடுத்து இந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் துவங்குகின்ற இந்த மகா சிவராத்திரி ஆனது பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 4:19 மணிக்கு நிறைவடைகிறது.

 ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த சிவராத்திரி தினத்தில் சிவனையும் பார்வதியையும் வழிபடுவதால் எண்ணற்ற பலன்கள் ஏற்பட்டு பாவ விமோசனம் கிடைப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.

 ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது ஆண்டுக்கு 12 முறை மாத சிவராத்திரியை நாம் கொண்டாடி வருகிறோம். அது மட்டுமல்லாமல் மாசி மாசம் வரும் சிவராத்திரியை தான் மகா சிவராத்திரி என்று அழைக்கிறோம்.

மேலும் மாதாமாதம் ஏற்படுகின்ற சிவராத்திரியை நாம் வழிபட முடியவில்லை என்றாலும் இந்த ஒரு மகா சிவராத்திரியை அனுஷ்டித்தால் அந்த வருடம் முழுவதும் நாம் ஏற்படுகின்ற ஏற்படும் சிவராத்திரியை வழிபட்டதாக அர்த்தம் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

 மேலும் அன்றைய இரவு முழுவதும் உறங்காமல் இருந்து அன்னை பார்வதியையும் அப்பன் சிவனையும் வழிபட்டால் குடும்பத்தில் இருக்கும் சங்கடங்கள் தோஷங்கள் அனைத்தும் விலகி சந்தோஷம் நிலவும்.

 இந்நிலையில் இந்த ஆண்டு வருகின்ற சிவராத்திரி மிகவும் ஸ்பெஷலான சிவராத்திரி என்று ஏன் கூறுகிறார்கள் தெரியுமா? சாஸ்திரப்படி 30 வருடங்களுக்குப் பின் கும்ப ராசிக்கு சனி பகவான் செல்வதாலும் பிப்ரவரி 13-ஆம் தேதி அன்று சூரியன் கும்ப ராசிக்குள் பிரவேசம் செய்கிறார்.

 இதனை அடுத்து மகா சிவராத்திரியில் சனியும் சூரியனும் கும்பத்தில் வீற்றிருக்க இதனுடன் சுக்கிரன் அதனுடைய ராசியான மீனத்தில் அமர்ந்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.

 அது மட்டுமல்லாமல் இந்த மகா சிவராத்திரி தினத்தில் பிரதோஷ விதத்தில் நிகழ்வும் ஏற்பட உள்ளதால் இந்த முறை ஏற்படுகின்ற சிவராத்திரிக்கு கூடுதல் சிறப்புகள் உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

இந்த சிவராத்திரி அன்று நீங்கள் விரதத்தை கடைப்பிடித்து முழு மனதோடு உங்கள் கோரிக்கையை ஆண்டவன் முன் வைப்பதன் மூலம் உங்கள் வீட்டில் திருமண தடைகள் இருந்தால் நீங்கும் முத்தி அடைய விரும்புவர்கள் கட்டாயம் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் எடுத்துக் கூறுகிறது.

அதுமட்டுமல்லாமல் பெண்கள் விரும்பக் கூடிய வரங்கள் அமைய பெண்கள் அனைவரும் இந்த விரதத்தை இருக்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …