தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் இருந்தே விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கும் கதைகளங்கள் எல்லாமே வித்தியாசமானதாக இருந்து வந்துள்ளன.
அதனால்தான் மிகக் குறுகிய காலத்திலேயே விஜய் சேதுபதி அதிகமான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகராக இருந்து வருகிறார். அவரது முதல் திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்று அவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
விஜய் சேதுபதி படம்
அதற்கு பிறகு அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. தொடர்ந்து வளர்ச்சியை காண துவங்கினார் விஜய் சேதுபதி. அதற்குப் பிறகு அவர் நடித்த சூது கவ்வும் திரைப்படம் பெரும் மாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தி கொடுத்தது.
சூது கவ்வும் திரைப்படத்தில் நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அதற்குப் பிறகுதான் அவருக்கு வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கின. தொடர்ந்து மலையாளம் தெலுங்கு என்று நடித்து வந்த விஜய் சேதுபதி ஹிந்தியில் ஜவான் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து விட்டார்.
அடுத்து பரோட்டா மாஸ்டராக அவதாரம்
அதனை தொடர்ந்து இனி வில்லனாக நடிக்க முடியாது என்றும் அதற்கு பிறகு கூறிவிட்டார் விஜய் சேதுபதி. ஏனெனில் இப்பொழுது ஹீரோவாக நடிப்பதை விடவும் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. எனவே தொடர்ந்து வில்லன் நடிகராக மாறிவிடக் கூடாது என்று முடிவை எடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
இந்த நிலையில் மகாராஜா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த திரைப்படத்தில் இவருடன் சேர்ந்து நடிகை நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்.
தமிழ் படத்தையும் பின் தள்ளிய விஜய் சேதுபதி
இயக்குனர் பாண்டியராஜ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பரோட்டா மாஸ்டராக நடிக்கிறாராம் விஜய் சேதுபதி. இதற்காக பரோட்டா மாஸ்டரிடம் சென்று பயிற்சியும் எடுத்து வந்திருக்கிறார் விஜய் சேதுபதி.
மேலும் படப்பிடிப்பு தளத்திலும் அங்கு உள்ளவர்களுக்கு பரோட்டா செய்து கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் இந்த செய்தி ட்ரெண்டாகி வருகிறது இதற்கு நடுவே மகாராஜா திரைப்படம் வேற லெவலில் உலக அளவில் ரெஸ்பான்ஸ் கொடுத்து வருகிறது.
நெட்ஃப்ளிக்ஸில் வெளியான மகாராஜா திரைப்படம் உலக அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. வெளிநாட்டு மக்கள் பலரும் அந்த படத்தை புகழ்ந்து வருகின்றனர் எந்த நிலையில் இந்த வருடம் நெட்ஃப்ளிக்ஸ் வெளியான திரைப்படத்திலேயே மகாராஜா திரைப்படம்தான் அதிகமான மக்களால் பார்க்கப்பட்ட படமாக இருக்கிறது.
மொத்தம் 1.8 கோடி பார்வைகளை கடந்து இருக்கிறது மகாராஜா திரைப்படம். இதனை அடுத்து மகாராஜா படத்திற்கு இது ஒரு பெரிய அங்கீகாரம் என்று கூறப்படுகிறது.