வாய் விட்டதால் தவறிய சினிமா வாய்ப்பு..! மாஸ்டர் மகேந்திரன் குறித்து பிரபல நடிகர்..!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன் பல்வேறு தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த குழந்தை நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருதை வென்றவர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்த இருக்கக்கூடிய மாஸ்டர் மகேந்திரன் வளர்ந்த பிறகு ஹீரோயினியாக நடிக்க முயற்சி செய்தார்.

அந்த வகையில் இவர் 2013-இல் விழா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். எனினும் இந்த திரைப்படமானது அவர் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை.

மாஸ்டர் மகேந்திரன்..

1994-ஆம் ஆண்டு வெளி வந்த நாட்டாமை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய மாஸ்டர் மகேந்திரன் 1995-இல் தாய்க்குலமே தாய்க்குலமே என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மாநில விருதை பெற்ற இவர் முத்து, வாய்மையே வெல்லும், ஆஹா, கும்பகோணம் கோபாலு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் மீண்டும் கும்பகோணம் கோபாலு படத்திற்காக குழந்தை நட்சத்திர விருதை பெற்ற இவர் தேவி படத்திற்காகவும் தெலுங்கில் சிறந்த குழந்தை நடிகருக்கான நந்தி விருதை இரண்டு முறை பெற்றதை அடுத்து நான்கு முறை குழந்தை நட்சத்திர விருதை பெற்ற வரிசையில் வருகிறார்.

பார்ப்பதற்கு துரு துரு என்று அனைவரையும் கவரக்கூடிய வகையில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் விழா திரைப்படத்திற்கு பிறகு ஹீரோவாக நடிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.

வாய்விட்டதால் தவறிய சினிமா வாய்ப்பு..

இந்நிலையில் தமிழ் திரையுலகில் வெளி வந்த சூப்பர் ஹிட் படமான சூரிய வம்சம் படத்தில் மாஸ்டர் மகேந்திரன் வாய்விட்டதால் வாய்ப்பு நழுவிப்போன விஷயம் குறித்து பிரபலம் ஒருவர் கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அது மட்டுமல்லாமல் எந்த காரணத்தால் தான் இவர் வாய்ப்பை இழந்தாரா? என்ற பேச்சுக்கள் இணையம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

அது பற்றிய விரிவான விஷயம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பிரபலம் உடைத்த உண்மை..

அந்த வகையில் சூரிய வம்சம் படத்தில் சரத்குமாரின் பேரன் கதாபாத்திரத்தில் மாஸ்டர் மகேந்திரன் தான் முதலில் நடிக்க இருந்தார்.

இதனை அடுத்து மாஸ்டர் மகேந்திர ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த உடனே என்ன டயலாக், எத்தனை சாட், என்ன கேமரா அங்கிள் என்று கேட்டவுடன் டைரக்டர் விக்ரமன் கடுப்பாகி அந்த பையனை வெளியே அனுப்புங்க என்று சொல்லிவிட்டதாக பாவா லட்சுமணன் கூறிய விஷயமானது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறியிருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version