இதை நம்ம சூப்பர் ஸ்டார் பாக்கணும்..! வருடா வருடம் ஏழை குழந்தைகளுக்கு மகேஷ் பாபு செய்யும் உதவியை பாருங்க..!

தெலுங்கு படத்தின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் மகேஷ்பாபு முன்னாள் முன்னணி திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகன் ஆக விளங்குகிறார்.

இவர் ஆரம்ப நாட்களிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடைத்து தனது 25 வது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

இத நம்ம சூப்பர் ஸ்டார் பாக்கணும்..

இவரது முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் அவற்றின் வணிக வெற்றிக்காக அறியப்பட்டவை. ஒக்கடு திரைப்படம் கில்லி என்ற பெயரில் தமிழில் போக்கிரி என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.

இதனை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆக திகழக்கூடிய மகேஷ் பாபு வருடா வருடம் ஏழை குழந்தைகளுக்கு செய்யக்கூடிய உதவி பற்றிய விஷயங்கள் அண்மையில் இணையங்களில் வெளி வந்தது.

அந்த வகையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு வருடா வருடம் தன்னுடைய சம்பளத்திலிருந்து 10% தொகையை ஏழையை குழந்தைகளின் கல்விக்காகவும் அவர்களுடைய மருத்துவ செலவுக்காகவும் நேரடியாக செலவு செய்து வருகிறார் என்ற தகவல் இணைய பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறது.

மேலும் இதற்காக கிட்டத்தட்ட வருடா வருடம் 30 கோடி ரூபாய் குழந்தைகளின் மருத்துவ செலவு ஆகவும் படிப்பு செலவுக்காகவும் செலவிடுகிறார் மகேஷ் பாபு எனவும் இதனை நேரடியாக தன்னுடைய மேற்பார்வையில் செய்கிறார் என்பது தான் இங்கே ரசிகர்களால் வியப்பாக பார்க்கப்படக் கூடிய விஷயமாக உள்ளது.

வருடா வருடம் ஏழை குழந்தைகளுக்கு..

மேலும் நடிகர்கள் பொதுவாக உதவி செய்யும் பொழுது ஏதேனும் ஒரு அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் சில நிர்வாகிகளை நியமித்து இப்படியான விஷயங்களை செய்வார்கள்.

ஆனால் நடிகர் மகேஷ்பாபு நேரடியாக தன்னுடைய மேற்பார்வையில் இந்த விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றது.

இதனை அறிந்த ரசிகர்கள் இதனை நம்ம சூப்பர் ஸ்டார் பார்க்கணும் என்று கலாய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்னும் சிலர் இப்படியான விஷயங்களை கூறினால் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் ஓடி வந்து தலைவர் மறைமுகமாக உதவிகளை செய்து கொண்டிருக்கிறார் ரகசியமாக உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.

அவருடைய ரசிகர் மன்றம் மூலமாக உதவிகளை செய்து கொண்டிருக்கிறார் என விதவிதமாக முட்டுக் கொடுப்பார்கள் எனவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அப்படி செய்யக்கூடிய விஷயங்களை விவரமாக பதிவிட்டால் அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையில் இருக்கும் என்று சிலர் ரசிகர்களும் சொல்லி இருக்கிறார்கள்.

மகேஷ் பாபு செய்யும் உதவி..

இதனை அடுத்து எழுத்து அறிவித்தவன் இறைவனுக்கு ஒப்பம் என்ற சொற்றொடர்க்கு ஏற்ப மகேஷ்பாபு செய்யும் இந்த உதவியானது பலரும் கல்வி அறிவு அடைவதோடு பொருளாதாரத்திலும் மேன்மை அடைய அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது.

இவரைப் போல பிரபலங்களாக இருக்கக்கூடிய பலர் இது மாதிரியான விஷயங்களில் ஈடுபடுவதன் மூலம் சமுதாயம் மறுமலர்ச்சி ஏற்படும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

எனவே இணையத்தில் வைரலாகி இருக்கும் எந்த விஷயத்தை கேள்விப்பட்டு ரசிகர்கள் பலரும் மகேஷ்பாபுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அனைவரும் மகேஷ்பாபு செய்வது போல தங்களால் முடிந்த உதவிகளை கல்வி கற்கும் குழந்தைகளுக்கு செய்வது அவசியம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam