கோவக்கார கிளி…தான் என்றாலும் கொஞ்சுகிற அழகிதான் மகேஸ்வரி..!

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி பார்த்தவர்களுக்கு, நிச்சயமாக மகேஸ்வரியை தெரிந்திருக்கும் ஏனெனில், பல ஆண்டுகளாக நீடித்த அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்களில் மகேஸ்வரியும் ஒருவர். அதாவது, வாரத்தில் ஒரு நாள் சனி அல்லது ஞாயிறு தினத்தில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பல்வேறு கலைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவர்.

அந்த நிகழ்ச்சியை சிட்டிபாபு, மதன்பாபு இருவரும் நடுவர்களாக இருந்து வழிநடத்துவர். சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, வயிறு குலுங்க குலுங்க சிரித்து விட்டு செல்வர். ஏனெனில், இது முழுமுழுக்க நகைச்சுவை நிகழ்ச்சி. ஸ்டாண்ட் அப் காமெடி, மிமிக்ரி, மாடுலேசன் காமெடி என ஒரு மணி நேரம் போவதே தெரியாது.

மதுரை முத்து, ரோபோ சங்கர், ஈரோடு மகேஷ், கோவை குணா போன்ற சிலர், இந்நிகழ்ச்சி மூலம்தான் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார்கள். அதன்பின், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தங்களது திறமையை வெளிப்படுத்தி, சினிமாவிலும் தடம் பதித்தனர்.
இந்நிகழ்ச்சி மூலம், தொகுப்பாளராக பிரபலமானவர்தான் மகேஸ்வரி. ஆனால், கடந்தாண்டில் விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்று, மக்கள் மத்தியில் மகேஸ்வரியா இப்படி? என அதிர்ச்சியை ஏற்படுத்தியவரும் இவரே.

கணவரை பிரிந்து விட்டார். இவருக்கு ஒரு பையன் இருப்பதாக கூறிய மகேஸ்வரி, பிக்பாஸ் வீட்டுக்குள் அணிந்திருந்த ஆடைகள், கவர்ச்சியின் எல்லையை தொட்டன. அதேபோல், வீட்டுக்குள் இருந்தவர்களிடம் தேடிச் சென்று இவர் வம்பிழுத்த விதமும், மற்ற போட்டியாளர்களிடம் இவர் காட்டிய அகம்பாவமான போக்கும், பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

தேவையின்றி வம்பிழுத்து, குழாயடி சண்டை நடத்திய மகேஸ்வரியால், அந்த வீட்டுக்குள் பல பிரச்னைகள் புதிது புதிதாக தோன்றியது.
ஆனால், திருமணமான சில ஆண்டுகளிலேயே சாணக்கியன் என்ற தனது கணவரை பிரிந்த இவர், அவர் மனதளவிலும், உடல் அளவிலும் அவர் மிகவும் துன்புறுத்தியதாக கூறி இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது போக்கை பார்த்த ரசிகர்கள் பலரும், நிச்சயமாக இவர்தான் அவரது கணவரை டார்ச்சர் செய்திருப்பார் என கமெண்ட் அடித்தனர்.

மகேஸ்வரி, சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், அந்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. இப்போதும் வீடியோ ஜாக்கி பணியை தொடர்ந்து கொண்டு வருகிறார்.,
அதே வேளையில், மகேஸ்வரி சமூகவலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருப்பதால், தனது புகைப்படங்களை தொடர்ந்து அப்லோடு செய்து வருகிறார். இவரது படங்களுக்கும் ரசிகர்கள் லைக்ஸ் குவிகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …