முதல் புருஷன் கட்டுன தாலி ஈரம் காயல.. புழல் ஜெயிலில் எனக்கு அந்த கொடுமை.. மைனா நந்தினி கண்ணீர்..!

2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. மைனா நந்தினி நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

வம்சம், மின்சாரம், வெப்பம், கேடி பில்லா கில்லாடி ரங்கா வெள்ளக்காரதுரை, ரோமியோ ஜூலியட் என்று நிறைய திரைப்படங்களில் இவரை பார்க்கலாம். போன வருடம் வெளியான சர்தார் திரைப்படத்தில் கூட ஒரு பாடலுக்கு மட்டும் வந்து நடனமாடிருப்பார் மைனா நந்தினி.

சின்னத்திரையில் பிரபலம்:

திரைப்படங்களை விடவும் இவரை அதிக பிரபலம் ஆக்கியது சின்னத்திரைதான் விஜய் டிவியில் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று அங்கு ஒரு பிரபலமான நபராக இருந்து வருபவர் மைனா நந்தினி. 2015 ஆம் ஆண்டு நடந்த கலக்கப்போவது யாரு சீசன் 5 ஜட்ஜ் ஆக இருந்து வந்தார் மைனா நந்தினி.

தொடர்ந்து அவருக்கு கிச்சன் சூப்பர் ஸ்டார் என்கிற விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடிஸ் என்கிற நிகழ்ச்சியிலும் இவர் பங்கு கொண்டார். இப்படியாக நிறைய சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார் மைனா நந்தினி.

வாழ்க்கையில் கஷ்டம்:

ஆனால் இதற்கு முன்பு அவர் பிரபலமாகாமல் இருந்த காலகட்டத்தில் அவருக்கு ஒரு வாழ்க்கை இருந்தது. அது மிகவும் துயரமான வாழ்க்கையாக இருந்தது என்று தனது பேட்டி ஒன்று கூறியிருக்கிறார் மைனா நந்தினி.

சிறுவயதில் இருந்தே கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்தான் நான். 1500 ரூபாய் வாடகைக்கு சிறிய அறை கொண்ட ஒரு வீட்டில் தான் நாங்கள் அனைவரும் தங்கி வந்தோம். அப்பொழுது எதிர்காலத்தை பற்றி எனக்கு எந்த யோசனையும் இல்லை.

எனக்கான வாழ்க்கையை நானே தேர்ந்தெடுத்தேன் ஒரு நபரை நான் திருமணமும் செய்தேன். அந்த நபரை திருமணம் செய்து மறுநாள் காலை சென்னைக்கு வந்தபோது எனது கணவரை கைது செய்து சென்று விட்டனர்.

எனக்கு கட்டிய தாலியின் ஈரம் கூட காயவில்லை. ஆனால் மறுநாள் நான் புழல் சிறையின் வாசலில் நின்று கொண்டு அவரை வழி அனுப்பி வைத்தேன். இப்பொழுது மைனா என்றால் பலருக்கும் தெரியும் பிரபலமான ஒரு நபராக இருக்கிறேன்.

னால் ஒரு காலத்தில் ஒவ்வொரு நபருக்கும் முன்னாலும் போய் நிற்பதற்கு அஞ்சிய மைனா ஒருத்தி இருக்கிறாள் என்று கூறி அந்த மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார் மைனா நந்தினி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam