இனிமே விஜய் டிவியில் வர மாட்டேன்.. மைனா நந்தினி கூறிய காரணத்தை பாருங்க..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன் 2 வில் தங்க மீனாட்சியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி வெளிவந்த காலகட்டத்தில் அவருக்கு ஜோடியாக சரவணனாக நடிகர் கவின் நடித்திருந்தார்.

இப்பொழுது நடிகர் கவின் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக மாறி இருக்கிறார். அதேபோல மைனா நந்தினியும் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெறும் முயற்சியில் இருந்து வருகிறார். தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளிலும் தொடர்களிலும் வாய்ப்பை பெற்றவர் நந்தினி.

சன் டிவியில் அறிமுகம்:

ஆனால் ஆரம்பத்தில் இவருக்கு சன் டிவியில்தான் முதன் முதலாக வாய்ப்பு கிடைத்தது. 2012 ஆம் ஆண்டு சன் டிவியில் வெளியான அழகி சீரியலில்தான்  முதன்முதலாக வாய்ப்பை பெற்றார் மைனா நந்தினி. ஆனால் அழகு சீரியல் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை கொடுக்கவில்லை.

அதற்கு பிறகு கலைஞர் டிவியில் வெளியான அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்கிற சீரியலில் நடித்தார். பிறகுதான் அவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். பிறகு விஜய் டிவியில் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்ததை அடுத்து தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

அதனை தொடர்ந்து அவருக்கு நிகழ்ச்சியை டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. கலக்கப்போவது யாரு, கிச்சன் சூப்பர் ஸ்டார், டான்ஸ் ஜோடி டான்ஸ், காமெடி கில்லாடிஸ் மாதிரியான நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார் மைனா நந்தினி.

மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்தாலும் கூட மைனா நந்தினியின் சொந்த வாழ்க்கை என்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. திருமணமான உடனே அவரது கணவர் ஜெயிலுக்கு போய்விட்டார் என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் மைனா நந்தினி.

திரைப்பட வாய்ப்புகள்:

பிறகு ஜெயலில் இருந்து வந்த கணவர் ஆறு மாதங்களிலேயே இறந்துவிட்டார் அதற்கு பிறகுதான் சினிமாவை தேடி வந்திருக்கிறார் மைனா நந்தினி. தற்சமயம் தமிழில் படங்களிலும் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

அரண்மனை 2, சர்தார் மாதிரியான திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் மைனா நந்தினி. தற்சமயம் ஹாட்ஸ்டாரில் வெளியான சட்னி சாம்பார் என்னும் தொடரிலும் இவர் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் இப்பொழுது எல்லாம் மைனா நந்தினியை விஜய் டிவி தொடர்களில் பார்க்க முடிவதில்லை. இதுக்குறித்து அவர் கூரும்போது நான் என்னுடைய கனவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தின் காரணமாக நிறைய தொடர்களிலும் படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

அதனால் என்னால் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடிவதில்லை இப்பொழுதும் என்னை விஜய் டிவியில் நிகழ்ச்சிகளுக்கு அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் என்னால்தான் செல்ல முடியவில்லை மற்றபடி எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்று கூறியிருக்கிறார் மைனா நந்தினி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version