சில நடிகைகள் சினிமாவில் அல்லது சீரியலில் நடிக்க வரும் புதிதில் சுமாரான அழகுடன், குறிப்பாக மாநிறத்துடன் காணப்படுவது உண்டு. ஆனால் சினிமாவில், சீரியல்களில் தொடர்ந்து நடிக்கும் அவர்களில் ஒரு சிலர், ஒரு காலகட்டத்தில் நல்ல நிறத்துடன், பளிச் என்ற தோற்றத்தில் மாறி விடுகின்றனர்.
மைனா நந்தினி
துவக்கத்தில் டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நந்தினி. சரவணன் மீனாட்சி 3, சின்னதம்பி, அழகி, மருதாணி, அரண்மனைக்கிளி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
பல படங்களில்…
தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். வம்சம், அரண்மனை 3, நம்ம வீட்டுப்பிள்ளை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், காஞ்சனா 3, பெட்ரோமாக்ஸ், விக்ரம், விருமன், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் மைனா நந்தினி.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 6ல் மைனா நந்தினி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கிச்சன் சூப்பர் ஸ்டார் 3, திரு மற்றும் திருமதி கிலாடிஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.
சுமாரான மாநிறத்தில்…
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானதால், அவரது பெயரே மைனா நந்தினி என்று நிலைத்து விட்டது. துவக்கத்தில் மாநிறத்தில் சுமாராக காணப்பட்ட மைனா நந்தினி, இப்போது இப்படி இவ்வளவு கலராக பளிச் என இருக்கிறார் என்பது, ரசிகர்களின் ஆச்சரியமாக இருக்கிறது.
பளீர் நிறத்துக்கு மாறியது எப்படி?
ஏனெனில் சில சீரியல்களில் நடிக்கும் போது துவக்கத்தில் கருப்பான காணப்பட்ட மைனா நந்தினி, இப்போது டாலடிக்கும் நிறத்தில் பளீரென இருப்பது பலருக்கும் ஆச்சரியம் தந்துள்ளது.
ஏபிசி ஜூஸ்
இதற்கான காரணத்தை மைனா நந்தினியே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். அவர் தினமும் காலையில் ஏபிசி ஜூஸ் குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதாவது ஏபிசி ஜூஸ் என்றால் ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய 3 தான் ஏபிசி ஜூஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இவை மூன்றையும் அரைத்து குடித்திருக்கிறார்.
தினமும் பேஸ்மேக்
அதுமட்டுமின்றி கேரட் மற்றும் பீட்ரூட்டை இரண்டையும் கலந்து அரைத்த கலவையை முகத்தில் தினமும் ரெகுலராக முகத்தில் பேஸ்மேக் போல பூசிக்கொள்வது அவரது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்பிறகு ரோஸ் வாட்டர் அல்லது ரைஸ் வாட்டரில் தனது முகத்தை கழுவுவது மைனா நந்தினியின் வழக்கமாக இருந்து வருகிறது.
அதுமட்டுமின்றி முகத்தில் தினமும் சீரம் அப்ளை செய்தும் வந்திருக்கிறார் மைனா நந்தினி.
இப்படித்தான் கலர் ஆனேன்
இதன் காரணமாக தான் அவரது கருப்பான முகம், இப்போது பொன்னிறத்தில் பளிச் என மிக அழகான காட்சியளிக்கிறது. சாதாரண நிறத்தில் காணப்பட்ட அவர், இப்போது தக தக நிறத்துக்கு மாறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
ஆரம்பத்தில் அப்படி கருப்பாக இருந்த நான், இப்படித்தான் கலர் ஆனேன் என்று ரகசியம் உடைத்திருக்கிறார் நடிகை மைனா நந்தினி.