முட்டிக்கு மேல் ஏறிய கவுனில்.. கணவருடன் ரொமான்ஸ்… சூடேற்றும் மைனா நந்தினி..!

மைனா நந்தினி என்றால்தான், இவரை சட்டென பலருக்கும் அடையாளம் தெரியும். சரவணன் மீனாட்சி தொடரில், மைனா என்ற கேரக்டரில் நடித்த நந்தினியின் கேரக்டர் பேசப்பட்டது. அதனால், இவரை மைனா நந்தினி என்று அழைக்கத் துவங்கி, இப்போது மைனா நந்தினி என்றால்தான் சட்டென இவரது முகம் நினைவுக்கு வரும்.வம்சம் படத்தில், நடிகை சுனைனா தோழியாக இவர் நடித்திருந்தார். ஏ மலரு புள்ள… என வெகு தூரத்தில் இருக்கும் சுனைனாவை இவர் கூப்பாடு போட்டு அழைக்கும் காட்சி, படத்தில் பயங்கர கைதட்டலை பெற்றது. இந்த படத்தில், கஞ்சா கருப்பு, மைனா நந்தினியை காதலிப்பார்.

அரண்மனை 3, விக்ரம், விருமன், நம்ம வீட்டுப்பிள்ளை, சர்தார், வெணணிலா கபடிக்குழு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், காஞ்சனா 3, அன்பறிவு, பெட்ரோமாக்ஸ், வெள்ளக்கார துரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.விஜய் டிவியில், கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற மைனா நந்தினி, அவ்வப்போது காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்.

இவரது முதல் கணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், சில காலம் மன உளைச்சலில் இருந்த மைனா நந்தினி, பின்பு யோகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான ஆண் மகன் உள்ளார்.விஜய் டிவியில் கடந்த பிக்பாஸ் சீசன் 6ல், மைனா நந்தினி, ஒரு பெண் போட்டியாளராக பங்கேற்றாா். நிகழ்ச்சி துவங்கிய பின், ஒரு வாரம் கழித்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தவர் இவர் மட்டும்தான்.

பயங்கர கலாட்டா செய்வார், பிக்பாஸ் வீட்டுககுள் அதகளம் பண்ணுவார், பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் குறைவே இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நந்தினி, பெரிய அளவில் பிக்பாஸ் வீட்டில் பெரிய அளவில் பேசப்படவில்லை. அடக்கியே வாசி்த்தார் என்று சொல்ல வேண்டும். ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டனுடன் நிறைய நேரத்தை போக்கினார். எந்நேரமும் பிக்பாஸ் வீட்டுக்குகுள் அவருடனே காணப்பட்டார். அவருக்கு ஆதரவாகவே மைனா நடந்துகொண்டது, அந்த வீட்டுக்குள் இருப்பவர்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், நல்ல நண்பன் என, மணிகண்டனை அடிக்கடி மைனா குறிப்பிட்டார். உடன் பங்கேற்ற ரக்சிதாவிடம், தன் அன்பை, நட்பை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார்.

வாரந்தோறும் சனி, ஞாயிறு தினங்களில் வரும் கமல்ஹாசனிடம் மிக அலட்சியமாக பேசி, அவரது கேள்விகளுக்கு பொறுப்பின்றி பதில் சொல்லி, பிக்பாஸ் ரசிகர்களிடம் திட்டும் வாங்கினார்.இப்போது, இ்ன்ஸ்டாகிராம் பக்கத்தில், பட்டாயா என்ற நகரத்தில், மைனாவும் அவரது கணவர் யோகியும் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தாய்லாந்து நாட்டில் உள்ள நகரம் பட்டாயா. இது தாய்லாந்து வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ளது. கோடை கால வெயிலை சமாளிக்க, இந்த தம்பதி இங்கு சென்றுள்ளனர். கடற்கரை பகுதியிலும், வானுயர்ந்த கட்டடங்களுக்கு மத்தியிலும், போட் பயணங்களில் இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், மிக வேகமாக பரவி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …