மலையாள படங்களில் அது இருக்கு.. வாத்தி ஹீரோயின் சம்யுக்தா பேச்சை கேட்டீங்களா..?

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சம்யுக்தா மேனன் முதன்முதலில் மலையாள திரைப்படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

இவர் மலையாளத்தில் வெளிவந்த பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டில் நடித்து மலையாள நடிகையாக அறிமுகமானார்.

சம்யுக்தா மேனன்:

அதை எடுத்து 2018ல் தீவண்டி என்ற திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார். மலையாளத்தில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை சம்யுக்தா மேனன்.

தமிழில் முதன் முதலில் களரி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனிடையே பிரபல நடிகரான தனுஷுக்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த சம்யுக்தா நடிகையானார்.

இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் சம்யுக்தா மேனன்.

தெலுங்கில் அதிக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க அங்கு தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மலையாள திரைப்படத்திற்கும் தெலுங்கு திரைப்படங்களிலும் உள்ள வித்தியாசம் குறித்து பேசி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

நடிகைக்கு அது தான் முக்கியமா?

அதாவது மலையாள திரைப்படங்களை பொருத்தவரை நடிகைகளுக்கு பெரிதாக மேக்கப் தான் முக்கியம் என்று கூறி திணிக்க மாட்டார்கள்.

மலையாளத்தில் நடிப்புதான் முக்கியம். நடிப்பில் அதிக கவனம் செலுத்தி எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என கூறுவார்கள்.

ஆனால் அதே பார்முலாவை நான் தெலுங்கு படங்களில் நடிக்கும் போது ஃபாலோ செய்தேன். அதாவது மேக்கப் எல்லாம் போட்டுக்கொண்டு வந்து நின்று எனது போர்ஷனுக்கான டயலாக்கை நான் மனப்பாடம் செய்து கொண்டு இருந்தேன்.

அப்போது திடீரென காஸ்டியூம் டிசைனர் என் அருகில் வந்து என்னுடைய சேலை சரி இல்லை எனக் கூறி அதை அட்ஜஸ்ட்மென்ட் செய்தார்கள்.

அந்த சமயத்தில் நான் டயலாக் மனப்பாடம் செய்வதா? அல்லது சேலை அட்ஜஸ்ட் செய்வதா? என்று தெரியாமல் என்னுடைய கவனம் சிதறி போனது.

இதுபோன்று டயலாக் மனப்பாடம் செய்யும்போது வந்து தொந்தரவு செய்ய வேண்டாம் என கேட்டதற்கு தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை மேக்கப் தான் இங்கு முக்கியம்.

இதுதான் அவசியம் என கூறினார்கள் இதுபோன்று மலையாள சினிமாவில் இருக்கவே இருக்காது என கூறி இருக்கிறார்.

நான் ஷாட்டுக்கு தயாராகி வந்து நின்று கொண்டிருக்கும்போது இதுபோன்ற சம்பவங்கள் என்னுடைய கவனத்தையே மறக்க செய்து விடுகிறது.

தெலுங்கு திரைத்துறையை விளாசிய சம்யுக்தா:

இது தெலுங்கில் மட்டுமில்லாமல் மற்ற சில மொழிகளிலும் கூட ஹீரோயின்களுக்கு அவரது நடிப்பை முக்கியத்துவமாக வெளிப்படுத்தாமல் மேக்கப் , கவர்ச்சி மட்டுமே முக்கியம் எனக் கூறுகிறார்கள்.

இது என்னை பொருத்தவரை மிகவும் மோசமான ஒரு அனுபவமாக இருக்கிறது என அவர் கூறினார். இந்த பேட்டி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

இதனால் தெலுங்கு சினிமாவில் இனிமேல் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான் என பத்திரிகையாளர்கள் எழுத துவங்கி விட்டார்கள்.

ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி சர்ச்சை கிளப்பு வகையில் பேசினாலே வாய்ப்பு கிடைப்பது அரிதாகிவிடும்.

ஆனால் சம்யுக்தா ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவை பற்றியும் இப்படி பேசியிருப்பது அவரின் திரைப்பட வாழ்க்கைக்கே ஆப்பு வைத்துக்கொண்டதாக பலர் கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version