“ஆரோக்கியம் மிக்க மலை நெல்லி பச்சடி..!” அசத்தலான சுவையில் இப்படி செய்து பாருங்கள்..!

மலை நெல்லியில் உடலுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் உள்ளது. வருகின்ற கோடை காலத்தில் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள மிக எளிய டிஸ்சான இந்த மலை நெல்லி பச்சடியை உங்கள் வீட்டில் நீங்கள் செய்து சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற பயன்களை அடைய முடியும்.

 அப்படிப்பட்ட ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மலை நெல்லி பச்சடி செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன எப்படி செய்யலாம் என்பதை இக்கட்டுறையில் விரிவாக பார்க்கலாம் .

மலை நெல்லி பச்சடி செய்ய தேவையான பொருட்கள்

 1. மலை நெல்லி இரண்டு

2. மிளகாய் இரண்டு

3. குருவிய தேங்காய்  ஒரு கப்

4.கடுகு அரை டேபிள் டீஸ்பூன்

5.உப்பு தேவையான அளவு

6. தயிர் 100

தாளிக்க

7.தேவையான எண்ணெய்

8.கடுகு

9. உளுத்தம் பருப்பு

10. சிறிதளவு வெந்தயம்

11.கருவேப்பிலை

 செய்முறை

  முதலில் மலை நெல்லிக்காயை  உப்பில் முதல் நாளே ஊற வைத்து விடுங்கள்.  மறுநாள் இந்த மலை நெல்லிக்காய்யில்  இருக்கும் கொட்டையை நீக்கிவிட்டு இதனோடு எடுத்து வைத்திருக்கும் தேங்காய், பச்சை மிளகாய் சிறிதளவு கடுகை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

 இப்போது இந்த அரைத்த கலவையை 100 மில்லி இருக்கக்கூடிய தயிரில் அப்படியே பச்சையாக கலக்கி விடுங்கள். இதன்பின் இதற்கு தேவையான அளவு உப்பை சேர்த்து விடுங்கள்.

 மேலும் நீங்கள் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை விட்டு தாளிக்க தேவையான கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் போன்றவற்றை வெடிக்க விடுங்கள்.

இது வெடித்து வரும் நிலையில் கறிவேப்பிலையை போட்டு அந்த தாளிசம் செய்த பொருட்களை அப்படியே பச்சடியில் கொட்டி விட வேண்டும். இப்போது சுவையான அசத்தலான மலை நெல்லி பச்சடி தயார்.

பச்சடியை நீங்கள் கூட்டு உடன் தொட்டு சாப்பிடும் போது சுவை கூடுதலாக இருக்கும் மறக்காம இந்த பச்சடியை நீங்கள் செய்து பார்த்து சுவை எப்படி உள்ளது என்பதை எங்களுக்கு பகிருங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …