கல்யாணத்துக்கு அப்புறமும் இதை அதிகமா பண்ணேன்.. ஆனாலும்.. கர்ப்பம் ஆகிட்டேன்.. ரகசியம் உடைத்த மாளவிகா..!

2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகை மாளவிகா இவர் கட்டுமஸ்தான தோற்றத்தை கொண்டு தனது கிளாமர் அழகை படத்திற்கு படம் அதிகமாக காட்டி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதனால் மிகக்குறுகிய காலத்திலே பேமஸ் ஆகிவிட்டார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்து கொண்டிருந்தார் .

கவர்ச்சி கன்னியாக மாளவிகா அறிமுகம்:

தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் மாளவிகா நடித்திருக்கிறார் இவர் முதன் முதலில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த உன்னை தேடி என்ற திரைப்படத்தில் அஜித் குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்துதான் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

முதல் படத்திலிருந்தே தனக்கான அடையாளத்தை தக்க வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் அவர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நடிகையாக மாறினார்.

மாளவிகா நடிகை ஆவதற்கு முன்னர் மாடல் அழகியாக இருந்து தனது கவர்ச்சியின் மூலமாக திரைப்பட வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் திகட்டிய கவர்ச்சி:

மாளவிகாவின் நடிப்பில் வெளிவந்து வெற்றி நடை போட்ட திரைப்படங்களான பேரழகன் , வசூல்ராஜா எம்பிபிஎஸ், ரோஜா வானம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டுப் பயலே, உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

சினிமாவில் கவர்ச்சியான ரோல்களிலும் ஐட்டம் பாடல்களுக்கு ஆட்டம் போடுபவராகவும், குணசித்திர நடிகையாகவும், ஹீரோயின் ஆகவும் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தவறவிடாமல் இப்படி தொடர்ச்சியாக நடித்து மார்க்கெட் இருக்கும்போதே பிரபலமானவர் நடிகை மாளவிகா.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே நடிகை மாளவிகா கடந்த 2007 ஆம் ஆண்டில் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

ஆன்டி வயசிலும் அதிரும் கவர்ச்சி:

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.திருமணம் குழந்தை குடும்பம் என செட்டில் ஆன மாளவிகா அதன்பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார்.

தற்போது 44 வயதாகியும் மாளவிகா தனது கவர்ச்சி அழகை குறைவில்லாமல் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கார்.

இந்த வயசிலும் இவ்வளவு கிளாமரா என அவரை பார்த்து திகைக்காதவர்களே இல்லை… அந்த அளவுக்கு ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு அதிர வைத்து வருகிறார் மாளவிகா.

ஆரம்பத்தில் கவர்ச்சி கன்னியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த அவர் “வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” என்ற சூப்பர் ஹிட் பாடலின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகியது குறிப்பிடத்தக்கது.

தனது பருமனான உடலை படு வரிசையாக காட்டுவதில் கைவந்த கலையாக வைத்திருக்கும் மாளவிகா. சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் ஏன் சினிமாவில் இருந்து விலகினேன் என்பது குறித்த ரகசியத்தை உடைத்து இருக்கிறார்.

திருமணத்திற்கு பின் நிறைய பண்ணேன்:

அதாவது எனக்கு சினிமாவிலிருந்து விலக வேண்டும் என்ற ஒரு ஐடியாவே இல்லை. திருமணம் ஆன பிறகும் நிறைய படங்களை பண்ணேன்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட வேண்டும் என்று நான் யோசிக்கவே இல்லை. ஆனால், அதற்குள் கர்ப்பம் ஆகிட்டேன்.

அதனால், அதன் பிறகு சினிமாவில் என்னால் நடிப்பை தொடர முடியவில்லை. நான் கர்ப்பம் ஆனதால் மூன்று படத்துக்கு வாங்கின அட்வான்ஸ் பணத்தை கூட திருப்பி கொடுத்துட்டேன் என சமீபத்திய பேட்டியில் பதிவு செய்திருக்கிறார் நடிகை மாளவிகா.

இதனைக் கேட்ட அவரது ரசிகர்கள் இப்பவும் ஒன்றும் பிரச்சனை இல்லை நீங்க இப்ப கூட திரைப்படங்களில் நடிக்கலாம் உங்களது கவர்ச்சி அழகு கண்களை பறிக்கிறது எனக்கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version