பேட்ட படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமான மாளவிகா மோகன் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
பேட்டை படத்தைத் தொடர்ந்து இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏகப்பட்ட பட வாய்ப்புகள் மாளவிகாவுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து மாளவிகா, தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் படத்தில் நடித்திருந்தார் .இதில் இவரது கேரக்டர் மிகவும் சிறப்பாக இருந்தபோதிலும் இதைத் தொடர்ந்து அவருக்கு எந்தவித படவாய்ப்புகளும் பெருமளவு வரவில்லை.
இவரும் ஓய்வாக இருக்கும் வேலைகளில் மிக ஆக்டிவாக இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கமான ஒன்றுதான். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிகப் பேர் பாலோ செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
தற்போது மாளவிகா மும்பை ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தபோது அவரை புகைப்படம் எடுத்த ரசிகர்கள் என்ன இப்படி மாளவிகாவின் முகம் வீங்கி யிருக்கிறது. இவருக்கு என்ன ஆகிவிட்டது என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு தவறான சிகிச்சை மேற்கொண்டதால் ரைசா வில்சன் உடைய முகம் பெருமளவும் வீங்கி அகோரமாக காட்சி அளித்தது. அதுபோல மாளவிகா ஏதேனும் சிகிச்சையை தெரியாமல் எடுத்துக் கொண்டால் அதன் காரணமாகத்தான் இப்படி முகத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்று வேறு சில ரசிகர்கள் மிக அக்கறையோடு விசாரிக்கிறார்கள்.
காரிலிருந்து இறங்கி வந்த மாளவிகாவின் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது எல்லோருக்கும் இது போன்ற எண்ணங்கள் எழுவது இயற்கைதான் ஏனெனில் முற்றிலும் மாறுபட்டு காணப்பட்ட இவரின் புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதற்கான காரணத்தை தற்போது எழுப்பி வருகிறார்கள்.
மேலும் இதற்கான பதிலை அளிக்காத மாளவிகா கூடிய விரைவில் இதற்கான பதிலை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.