எப்போ இதை காட்டுவீங்க.. மோசமான கேள்விக்கு.. மாளவிகாமோகனன் கொடுத்த பதிலடி..!

ஹிந்தி, கன்னட மலையாள மொழிகளில் நடித்திருக்கும் நடிகை மாளவிகாமோகனன் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டவர்.

இவர் 2013-ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். அந்த வகையில் பட்டம் போல படத்தில் ரியா கேரக்டரை அற்புதமாக செய்து அடுத்தடுத்து பட வாய்ப்புக்களை பெற்றார். இதனை அடுத்து 2015-ஆம் ஆண்டு நிர்நாயக்கம் என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த இவருக்கு 2019-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த பேட்ட திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை மிகச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

இதனை அடுத்து 2021-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்த இவர் அடுத்த 2022-ஆம் ஆண்டு மாறன் படத்தில் தனுஷோடு ஜோடி போட்டோ நடித்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார்.

நடிகை மாளவிகா மோகனன்..

தற்போது சீயான் விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கும் மாளவிகா அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்த படம் இவரது நடிப்பு திறமையை ரசிகர்களின் மத்தியில் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையில் இருக்கக்கூடிய இவருக்கு அந்த படம் வெற்றி பாடமாக அமையும் என்பது இனி வரும் காலங்களில் தான் தெரியவரும்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய மாளவிகா மோகனன் தொடர்ந்து அத்து மீறிய கவர்ச்சியை காட்டக்கூடிய புகைப்படங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளியிட்டு வருகிறார்.

இதனை அடுத்து இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்களில் ஒருவர் மாளவிகா மோகனிடம் எப்ப நீங்க கிளாமர் காட்டுவதை நிறுத்திவிட்டு நடிக்க போறீங்க என்று ஓபன் ஆக கேட்டு அனைவரையும் அதிர வைத்து விட்டார்.

இதனை அடுத்து தங்கலான் படத்தில் கூட இவரது நடிப்பு சரியாக அமையவில்லை என்று இயக்குனர் பா ரஞ்சித் இவரை மாற்றி வேறொரு ஹீரோயினியை போடலாமா? என்று யோசித்தார் என்பது போன்ற தகவல்கள் கசிந்து வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

அதற்கு ஏற்றது போல இந்த ரசிகர் கேள்வி எழுப்பி இருப்பதை பார்த்து அதற்கு பதிலாக எப்போதுமே இல்லை அதில் உனக்கு என்ன பிரச்சனை என மாளவிகா பதிலடி தந்திருக்கக் கூடிய விஷயம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

எப்போ இத காட்டுவீங்க..

மேலும் சில ரசிகர்கள் எப்போதுமே நீங்கள் அதைத்தான் காட்டுவீங்க இப்பவும் அதையே தான் பண்ணி இருக்கீங்க எப்ப தான் நடிப்பீங்க.. என்று கூறிய விஷயம் ரசிகர்களின் மத்தியில் ஒரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதோடு மட்டுமல்லாமல் எப்போ நடிப்பு கிளாஸ் போவிங்க என்று இன்னொரு ரசிகர் கேட்க அதற்கு மாளவிகா கோபமாக பதில் அளித்திருக்கிறார்.

இந்த இரண்டு விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மாளவிகா மோகனன் என்றால் வெறும் கிளாமர் மட்டும் தான் என்பது போன்ற ஒரு விஷயத்தை ரசிகர்கள் அனைவரும் உணர்ந்து பல கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.

மோசமான கேள்விக்கு பதிலடி..

எனினும் இந்த படுமோசமான இரண்டு கேள்விகளுக்கும் தக்க வகையில் பதிலடி கொடுத்து இருக்கக்கூடிய மாளவிகா மோகனன் இனிவரும் படங்களிலாவது தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துவாரா? அல்லது வர இருக்கும் தங்கலான் படத்தை பார்த்தால் ரசிகர்கள் அவரது நடிப்புத் திறனை எப்படி மதிப்பிடுவார்கள் என்பது தங்கலான் படம் வெளி வந்த பின்பு தெரியவரும்.

அது வரை மாளவிகா மோகனன் காத்திருப்பது அவசியம் என பல ரசிகர்கள் கருத்துக்களை முன் வைத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் மாளவிகா மோகனன் பற்றி பல்வேறு வகையான கலவை விமர்சனங்களை தந்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version