விமானத்தில் அத்துமீறல்.. மாளவிகா மோகனன் கதறல்..! ரசிகர்கள் ஷாக்..!

நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசிக்குமார் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் இவரது நடிப்பு பேசப்பட்டது.

தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும், மாறன் படத்திலும் நடித்த மாளவிகா மோகனன், தற்போது சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்திலும் நடித்துள்ளார். பா. ரஞ்சித் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தில் நடிக்க மாளவிகா மோகனன் சிலம்பம் கற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனக்கு நேர்ந்த ஒரு மோசமான அனுபவம் குறித்து டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார் மாளவிகா மோகனன். தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் அவர் சமீபத்தில் பயணித்துள்ளார். அங்கு அவரை விமான ஊழியர்கள் படாதபாடு படுத்தியுள்ளனர் என்பது அவரது புகாரில் இருந்தே வெளிப்படையாக தெரிகிறது.

அந்த டிவிட் பதிவில், அந்த விமானத்தில் இருந்த ஊழியர்கள், பணியாளர்கள் மிகமிக கடுமையாகவும், மோசமாகவும் நடந்துக்கொண்டனர். அவர்களின் மோசமான நடவடிக்கை என்னை கடுமையாக பாதித்தது. இதுபோன்ற ஒரு மோசமான அனுபவத்தை நான், இதுவரை விமான பயணத்தில் அடைந்தது இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் பலத்த அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆனால் எந்தவிதமாக, விமான ஊழியர்கள், பணியாளர்கள் கடுமையாக நடந்துக்கொண்டனர் என்பதை மாளவிகா மோகனன் பதிவில் குறிப்பிடா விட்டாலும் அவர் அங்கு தனக்கு நேர்ந்த மிக மோசமான ஒரு அனுபவம் என்ற நிலையில்தான், இந்த பதிவை அவர் கோபமாக பதிவிட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam