தமிழ் திரை உலகில் மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்தவர்தான் மாளவிகா மோகனன். இதற்கு முன் இவர் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் முக்கிய கேரக்டர் ரோலில் நடித்திருந்தார் எனினும் மாஸ்டர் படம் இவருக்கு மாஸ் வெற்றியை தந்தது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த விதத்தில் இவர் தனுசுடன் இணைந்து மாறன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது எனினும் இந்த படம் தோல்வியை சந்தித்தது.
இதனை அடுத்து இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கம் தங்கலான் என்ற திரைப்படத்தில் சீயான் விக்ரத்தோடு இணைந்து நடித்த வருகிறார்.
இந்த படத்தில் நடிப்பதற்கான சூழலில் மிக கடுமையாக இவர் உழைத்திருக்கிறார். கூடவே பா ரஞ்சிக்கும் அதிக அளவு இவரிடம் வேலை வாங்கி இருக்கிறார் என்று கூறலாம்.
மேலும் இந்தத் திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று இயக்குனர் ரஞ்சித் கூறியிருக்கக்கூடிய வேளையில் படம் இன்னும் வெளியாகாத நிலையில் அடுத்த ஜாக்பாட் இவருக்கு அடித்துள்ளது.
அந்த ஜாக்பாட் என்னவென்றால் மாளவிகா மோகனன் அடுத்ததாக பாகுபலி படத்தில் நடித்த நடிகர் பிரபாஸுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இந்த படமானது மாருதி இயக்கத்தில் உருவாகும் என தெரியவந்துள்ளது.
இது குறித்து உறுதியான செய்தியை இவர் சமூக வலைத்தளங்களில் தனது ரசிகர்களோடு உரையாடிய போது தெரிவித்திருக்கிறார் என்பது ஹய்லைட் ஆன விஷயமாகும்.
மேலும் நாட்களுக்கு முன் இவருக்கு நடிப்பே தெரியவில்லை. நடிக்க வரவில்லை என்று தங்கலான் பட இயக்குனர் கூறி அந்த படத்தில் இருந்து இவரை நீக்கிவிட்டு வேறு நடிகையை போடலாமா என்பது போன்ற சில செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது இவர் அடுத்த ஜாக்பாட்டை நோக்கி நகர்ந்து இருப்பதை அடுத்து அதிர்ஷ்டக்காரி நடிகை என்ற பெயரை இவர் பெற்றுவிட்டார்.