தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலில் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். மேலும் இவர் தனுசுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்திருந்தார் .இந்தப் படம் ஓடிடி வெளியானது.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக எப்போதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் இவர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.
ஆனால் இவர் சமூக வலைத்தளங்கள் வெளியிட்ட அதிரடி கவர்ச்சியை காட்டும் புகைப்படங்களை பார்த்து தற்போது இவருக்கு இரண்டு முக்கிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் அந்த வாய்ப்பு என தற்போது தெரியவந்துள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் தங்கலான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் இவர் என்பது தற்போது உறுதியாகிவிட்டது.
மேலும் தெலுங்கில் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள புதிய படத்தில் இரண்டு கதாநாயகிகளில் இவரும் ஒருவர் மற்றொரு கதாநாயகி நிதி அகர்வால் என்று தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் மீண்டும் தனது கவர்ச்சி மிக்க நடிப்பை காட்ட இவர் களம் காண உள்ளார் என்பதால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பதோடு இவரின் படத்தை பார்க்கவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து அதற்கான லைக்கை குவித்து வருகிறார்கள்.
இந்த புகைப்படத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதல் கவர்ச்சியோடு இவர் இருப்பது அதன் சிறப்பம்சமாக உள்ளது. இதை எடுத்து ரசிகர்கள் இவர் அடுத்த கட்ட கவர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறார் என்று சூசகமாக பேசி வருகிறார்கள்.
இரண்டு படங்களில் பட்டையை கிளப்ப போகும் மாளவிகா மோகன் இனி வரும் காலங்களில் அதிக படங்களில் நடிக்க இந்தப் பட வாய்ப்பு தக்க முறையில் பயன்படுத்துவார் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.