தலைவிக்கு தில்ல பாத்தியா..? ஜாக்கெட் போடாமல்.. காட்டுவாசி கெட்டப்பில் தங்கலான் மாளவிகா மோகனன்..!

ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை மாளவிகா மோகனன். மாளவிகா மோகனனை பொறுத்தவரை அவருக்கென்று மலையாளத்திலேயே ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் வட்டாரம் இருக்கின்றன.

இருந்தாலும் கூட மலையாளத்தை விடவும் தமிழ் சினிமாவிற்கு இருக்கும் வரவேற்பை பார்த்து தமிழ் சினிமாவில் வந்து வாய்ப்பை பெற்றார் மாளவிகா மோகனன்.  தமிழ் சினிமாவில் அவருக்கு ஓரளவு வரவேற்பு இருக்கிறது என்று கூறவேண்டும்.

தமிழில் பெரிய ஹீரோக்களோடு வாய்ப்பு:

ஏனெனில் தமிழில் அறிமுகமானது முதலே மாளவிகா மோகனன் நடிக்கும் படங்கள் எல்லாமே பெரிய நடிகர்களின் படங்களாகதான் இருக்கின்றன எப்படி மாளவிகா மோகனனுக்கு மட்டும் முதல் படத்தில் இருந்து எல்லாமே ஸ்டார் நடிகர்களின் படமாக வாய்ப்பு கிடைக்கிறது என்று அது குறித்து ஒரு பக்கம் கேள்விகள் இருக்கின்றன.

இருந்தாலும் கூட மாளவிகா மோகன் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில்தான் கமிட்டாகி வருகிறார். முதன்முதலாக தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

அடுத்த திரைப்படமே அவருக்கு விஜய் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் மாளவிகா மோகனன். அந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளை அவர் ஒழுங்காக நடிக்கவில்லை என்று ஒரு பக்கம் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் மூன்றாவது திரைப்படமும் பெரிய நட்சத்திரத்தின் படத்தில்தான் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தங்கலான் கதாபாத்திரம்:

தனுஷ் கதாநாயகனாக நடித்த மாறன் திரைப்படத்தில் வாய்ப்பை பெற்றார் மாளவிகா மோகனன். ஆனால் மாறன் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அப்போதைய சமயத்தில் அந்த திரைப்படத்திற்கு நிறைய எதிர்மறை விமர்சனங்கள்தான் வந்த வண்ணம் இருந்தது.

மேலும் மாளவிகா மோகனின் கதாபாத்திரமும், அந்த திரைப்படத்தில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதற்கு பிறகு மலையாளத்தில் கிறிஸ்டி திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதில் ஒரு டியூஷன் டீச்சராக நடித்திருப்பார் மாளவிகா மோகனன்.

மீண்டும் தமிழில் வந்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் தங்கலான். இந்த திரைப்படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சூனியக்காரி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார்.

மொத்த படத்திலேயே மிக மோசமான கதாபாத்திரம் அதுவாகதான் இருக்கும் என்று ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த சூனியக்காரி கதாபாத்திரத்துக்காக மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் மாளவிகா மோகனன்.

இதுக்குறித்து அவர் கூறும் பொழுது பல மணி நேரம் அதற்காக மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மாளவிகா மோகனன் இந்த நிலையில் அந்த கெட்டப்பில் அவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகின்றன.

சூனியக்காரி வேடத்திற்காக எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார் என்பது அந்த புகைப்படத்தை பார்க்கும்பொழுது தெரிகிறது. அந்த கெட்டப்பில் மேலாடையே இல்லாமல் நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version