படப்பிடிப்பு தளத்தில் நிஜமாகவே அதன் மீது என்னை அமர வைத்தார் பா.ரஞ்சித்..! மாளவிகா மோகனன் திடுக்..!

மலையாள சினிமாவின் மூலமாக வெள்ளி திரைக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். மாளவிகா மோகனனை பொருத்தவரை கல்லூரி காலங்களில் இருந்து அவருக்கு திரை துறையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது.

இதற்காகவே மும்பைக்குச் சென்று மாஸ் மீடியா படிப்பை முடித்த மாளவிகா மோகனன் பிறகு மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். மலையாளத்தில் அவருக்கு குறைவான வரவேற்பே கிடைத்தது. தொடர்ந்து கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முயற்சி செய்து வந்தார் மாளவிகா மோகனன்.

தமிழில் வாய்ப்பு பெற்ற மாளவிகா:

ஆனால் எங்குமே அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பிறகுதான் 2019 ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மூலமாக தமிழில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். பேட்ட திரைப்படத்தில் பூங்கொடி என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

முதல் படமே பெரிய நடிகரின் படம் என்பதால் ஓரளவுக்கு அவருக்கு வரவேற்பு கிடைத்தது. படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக அவரது கதாபாத்திரம் இருந்தது. தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்பை பெற்றார் மாளவிகா மோகனன்.

ஆனால் அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு அதிக விமர்சனத்திற்கு உள்ளானது. நிறைய இடங்களில் படத்தில் மாளவிகா மோகனன் ஒழுங்காகவே நடிக்கவில்லை என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. தொடர்ந்து தனுசுக்கு ஜோடியாக மாறன் என்கிற படத்தில் நடித்தார் மாளவிகா மோகனன்.

பா.ரஞ்சித் படத்தில் நடந்த நிகழ்வு:

அந்த திரைப்படமும் அவருக்கு பெரிதாக வரவேற்பு பெற்று கொடுக்கவில்லை. பிறகு மலையாளத்தில் அவர் நடித்த கிறிஸ்டி என்கிற திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தற்சமயம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரிய கதாநாயகர்கள் அல்லது பெரிய இயக்குனர்கள் படத்தில்தான் தொடர்ந்து நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இந்த திரைப்படத்தில் மிகவும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கூறும் பொழுது தங்கலான் திரைப்பட அனுபவம் குறித்து பேசி இருந்தார் மாளவிகா மோகனன். அதில் அவர் கூறும் பொழுது தங்கலான் படப்பிடிப்பு நடந்த பொழுது ஒரு எருமை மாடு அலைந்து கொண்டிருப்பதை பார்த்தேன்.

அதை பார்த்துவிட்டு இயக்குனர் என்னிடம் வந்து உங்களுக்கு எருமை பிடிக்குமா> என்று கேட்டார் நான் ஆமாம் என்று சொன்னேன். உடனே எருமை மேல் நீங்கள் உட்கார வேண்டும் என்று சொல்லிவிட்டார் நான் சும்மா விளையாட்டுக்கு கூறுகிறார் என்று நினைத்தேன். ஆனால் படத்திற்காக ஒரு காட்சிக்கு நிஜமாகவே என்னை எருமை மீது அமர வைத்து விட்டார் இயக்குனர் பா ரஞ்சித் என்று கூறி இருக்கிறார் மாளவிகா மோகனன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version