சாதாரணமாகவே தமிழ் சினிமா மக்கள் மத்தியில் விக்ரம் திரைப்படத்திற்கு ஒரு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. ஏனெனில் விக்ரம் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் வித்தியாசமான கதை களங்கள் அல்லது வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க கூடியவர் என்பதால் அவரது திரைப்படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு.
இதற்கு முன்பாக அவர் நடித்த இருமுகன், ஐ, கோப்ரா மாதிரியான திரைப்படங்கள் அனைத்திலுமே வித்தியாசமாக ஏதோ ஒன்றை விக்ரம் செய்திருப்பதை பார்க்க முடியும். அந்த வகையில் தற்சமயம் அவர் பா ரஞ்சித்துடன் இணைந்து இருப்பது பலருக்கும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது என்று கூறவேண்டும்.
தங்கலான் திரைப்படம்:
ஏனெனில் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் பெரிதாக தோல்வி காணாத ஒரு இயக்குனர் ஆவார். அவர் இயக்கிய படங்கள் எல்லாமே பெரும் வெற்றிதான் அப்படி இருக்கும் பொழுது அவர் விக்ரமுடன் இணைந்து இயக்கும் தங்கலான் திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
கோலாரில் தங்கம் கிடைக்கும் பகுதியில் வாழும் ஆதிவாசி கூட்டத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் தங்கலான். தற்சமயம் பழங்குடியின மக்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படமும் பழங்குடியின மக்களை பற்றிய கதைதான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்கலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் துவங்கி ட்ரைலர் வரை அனைத்துமே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறத.
முக்கியமாக விக்ரமை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு போய் இருக்கின்றனர். இது சீயான் விக்ரம் தானா என்பதே பலருக்கும் சந்தேகமான விஷயமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.
அதிர்ச்சியடைந்த மாளவிகா:
படத்தில் வரும் ஒரு சூனியக்காரி காதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன். இந்த நிலையில் அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும் பொழுது இந்த படத்தில் எனக்கு வலுவான ஒரு கதாபாத்திரம் கொடுத்திருந்ததால் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
டெஸ்ட் சூட் நடத்தும் பொழுது ஜாக்கெட் அணியாமல் சேலை மட்டும் அணிந்து நடிக்க வேண்டும் என்றும் கூறினார்கள். நானும் ஸ்டூடியோவில் சிலர் மட்டுமே இருந்ததால் அப்படியே நடித்தேன். ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு வெட்ட வெளியில் பல பெண்கள் ஜாக்கெட் அணியாமல் வெறும் சேலை மட்டுமே கட்டிக் கொண்டு நடித்தனர்.
அவர்களை பார்த்த பிறகு எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. இன்னொரு பக்கம் ஆண்கள் எல்லாம் வெறும் கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு ரொம்பவே சின்ன ட்ரஸ்ஸில் ஆதிவாசி வேடத்தில் இருந்தனர். முக்கியமாக சீயான் விக்ரம் சாரின் லுக்கை பார்த்து எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. இதற்கு முந்தைய எந்த திரைப்படத்திலும் எனக்கு இப்படியான அனுபவங்கள் ஏற்பட்டதில்லை. எனவே தங்கலான் திரைப்படத்தில் நடித்த அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது என்கிறார் மாளவிகா மோகனன்.