17 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்… ரஜினியை சந்தித்த சந்திரமுகி பட நடிகை மாளவிகா மகிழ்ச்சியை எடுத்துக்கொண்ட செல்பி…!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த உன்னை தேடி என்ற படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் மாளவிகா.

தனது முதல் படத்திலேயே நல்ல நடிப்புத்திறனை காட்டியதால் அடுத்தடுத்து இவருக்கு நல்ல படங்கள் வாய்த்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் வட்டாரமும் விரிவானது. தொடர்ந்து அடுத்தடுத்து நான்கு தமிழ் படங்களில் கமிட்டாகி அந்த படங்கள் வெளியானது. இதில் சிறந்த கதை அம்சத்தை இவர் தேர்வு செய்யாத காரணத்தினால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வந்தது.

 இதனை அடுத்து இவர் கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடிக்க தொடங்கினார். ஆனால் அதிகபட்சமாக தமிழ் படங்களில் தான் நடித்திருக்கிறார்.மேலும் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக சித்திரம் பேசுதடி என்ற படத்தில் ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறார்.

மேலும் மாயக்கண்ணாடி, மச்சக்காரன், சிங்கக்குட்டி போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து நடித்திருக்கிறார். இதுபோலவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் மாளவிகா ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தது அனைவருக்குமே நினைவிருக்கும்.

 இந்த படத்தில் நடித்து சுமார் 17 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில் சமீபத்தில் தேவாவின் மியூசிக் கான்கிரேட்டில் கலந்து கொண்ட போது இவர் சிறப்பு அழைப்பாளராக வந்த ரஜினியை சந்தித்திருக்கிறார்.

 அப்போது மிக உற்சாகமடைந்த மாணவிகள் சூப்பர் ஸ்டார் ரஜினியோடு எடுத்துக் கொண்ட செல்ஃபி மற்றும் நடிகை மீனாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களால் மிக்க மகிழ்ச்சி அடைந்த இவர் தற்போது ரஜினியோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டு வைரலாக்கிவிட்டார்.

அந்த வகையில் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரஜினியை இவர் சந்தித்ததோடு மட்டுமல்லாமல் புகைப்படம் எடுத்திருப்பது இவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்ற பதிவே ரசிகர்களை குஷிப்படுத்தி விட்டது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு லைக் போட்டு வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …