கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் தன்னுடைய முகத்தை பதித்தவர் தான் நடிகை மாளவிகா. ஒரு காலத்தில் நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர் தனது நடிப்பால் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்று கூறலாம்.
தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் உன்னை தேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் தொடர்ந்து நடிகர் முரளி, கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை இந்த திரையுலகில் பிடித்துக் கொண்டார்.
இதன்பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய பின்னால் சின்ன சின்ன கேரக்டர் ரோடில் நடித்து வந்தார்.குறிப்பாக இவர் நடித்த திருட்டுப் பயலே என்ற திரைப்படத்தை யாராலும் இன்று வரை மறக்க முடியாது. இந்த சூழ்நிலையில் சமூக வலைத்தளங்கள் பிஸியாக இருக்கக்கூடிய மாளவிகா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய யோகா உடற்பயிற்சி புகைப்படங்களை பார்த்து அனைவரும் தாறுமாறாக ரசித்து வருகிறார்கள்.
இதைப் பார்த்த சில ரசிகர்கள் இவர் யோகா செய்வதினால் தான் இன்றும் அதே இளமையோடு காட்சியளித்திருக்கிறாரா என்ற கேள்விகளையும் கேட்டிருக்கிறார்கள்.
மேலும் தலைகீழாக நின்று கொண்டு இவர் செய்யும் யோகாவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அட இப்படி எல்லாம் இவர் அதிக ரிஸ்க் எடுத்து யோகாவை செய்வாரா என்பது ஆச்சரியமாகவே உள்ளதே என்று கூறி இருக்கிறார்கள்.
மேலும் உடலை வில் போல வளைத்துக் கொண்டு ஒரு காலை மட்டும் லேசாக மடக்கி தூக்கி கைகளை இரண்டையும் கீழே வைத்து தனுராசனத்திலும் ஒரு புதுவகை ஆசனமாக இது உள்ளதே என்ற கேள்வியை ரசிகர்கள் மட்டுமல்ல யோகா நிபுணர்களும் எழுப்பி இருக்கிறார்கள்.
தற்போது இந்த யோகா ஸ்டில்கள் தான் ரசிகர்கள் மத்தியில் மிக வைரலாக பரவி வருகிறது. மேலும் யோகா செய்வதால் உடல் மட்டுமல்ல மனதிற்கும் நல்ல ஒரு மாற்றம் கிடைக்கும் என்பதை உணர்ந்து ரசிகர்கள் இவர்களை ஃபாலோ செய்து இவர் செய்வது போல செய்வார்களா என்பதை வருங்காலங்களில் நாம் தெரிந்து கொள்ளலாம்.