41 வயதே ஆன பகத் பாசிலுக்கு வந்த வியாதி..! அவரே வெளியிட்ட தகவல்.. ரசிகர்கள் ஷாக்..!

மலையாள நடிகர்களில் சிறப்பான நடிப்பு திறமை கொண்ட ஒரு நடிகராக அறியப்படுபவர் நடிகர் பகத் ஃபாசில். அவரது தந்தை மூலமாக மலையாள சினிமாவிற்குள் வந்தார் என்றாலும் கூட தனிப்பட்ட தனது நடிப்பின் மூலமாக மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் முக்கியமான ஒரு நபராக பகத் ஃபாசில் இருந்து வருகிறார்.

அதே சமயம் தமிழ் சினிமாவிலும் தற்சமயம் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். 2002 ஆம் ஆண்டு முதலே மலையாள சினிமாவில் நடித்து வருகிறார் பகத் ஃபாசில். பல காலங்களாக மலையாள சினிமாவில் நடித்து வந்த அவர் வேலைக்காரன் திரைப்படம் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார்.

தமிழ் சினிமாவில் அறிமுகம்:

சொல்லப்போனால் வேலைக்காரன் திரைப்படத்தில் இவர்தான் வில்லன் கதாபாத்திரம் என்றாலும் கூட பலருக்கும் பகத் ஃபாசிலின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. அதனை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் என்னும் திரைப்படத்திலும் சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்தார்.

fahadh-faasil

புஷ்பா திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பகத் ஃபாசில். தொடர்ந்து பகத் பாசிலை இப்படி வில்லன் கதாபாத்திரத்தில் பார்த்த தமிழ் மக்கள் மத்தியில் ஒரு ஹீரோ கதாபாத்திரத்திலும் அவர் அறிமுகமானார்.

விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசனை கண்டறியும் முக்கியமான ஒரு கதாபாத்திரமாக நடித்திருந்தார். அதன் மூலமாக ஹீரோவாகவும் இங்கு பிரபலமானார். தற்சமயம் அவர் நடித்த ஆவேசம் என்கிற திரைப்படம் வெகுவாக பாராட்டை பெற்று வருகிறது.

தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் பகத் ஃபாசில். ஆவேசம் திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஒரு வில்லன் கதாபாத்திரத்தில்தான் அவர் நடித்திருக்கிறார் என்றாலும் அவரை ஒரு கதாநாயகன் போலவே மக்கள் பார்த்து வருகின்றனர்.

புதிய நோய் குறித்து பேச்சு:

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பகத் ஃபாசில் ஏ.டி.எச்.டி என்னும் நோயை பற்றி பேசி இருக்கிறார். அதில் பேசிய அவர் ”ஏ.டி.எச்.டி நோயை குணப்படுத்தி விடலாமா? அது குணமாகும் நோய்தானா என்று மருத்துவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் சிறு வயதிலேயே இந்த நோயை கண்டறிந்து விட்டால் குணப்படுத்தி விடலாம் என்று கூறினார்கள்.

Fahadh-Faasil

41 வயதில் இந்த நோய் கண்டறியப்பட்டால் அதை குணப்படுத்த முடியுமா? என்று நான் கேட்டேன். ஏனென்றால் எனக்கும் ஏ.டி.எச்.டி குறைபாடு உள்ளது” என கூறியிருக்கிறார். ஏ.டி.எச்.டி என்பது மூளையில் ஏற்படும் நரம்பு தொடர்பான பிரச்சனை ஆகும்.

இந்த குறைபாடு உள்ளவர்கள் மிகவும் கவன குறைவாக இருப்பார்கள் எந்த ஒரு வேலையிலும் அவர்களால் அதிக கவனம் செலுத்த முடியாது என கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version