தற்போது மலையாள திரை உலகை புரட்டிப் போடக் கூடிய அளவு ஹேமா கமிஷனின் அறிக்கை உள்ளது என்று சொல்லலாம். இதை அடுத்து பிரபல நடிகை, நடிகர்கள் அனைவரும் என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ? என்று அரண்டு போய் தங்களது நடிகர் சங்கப் பதவியை ராஜினாமா செய்து விட்டார்கள்.
இந்த நிலையில் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்தும் பாலியல் வன்புணர்வுகள் குறித்தும் பல்வேறு வகையான விஷயங்களை ஓபன் ஆக தற்போது பாதிக்கப்பட்ட நபர்கள் சொல்லி வருகிறார்கள்.
இயக்குனர் ரஞ்சித் மீது இளைஞர் பரபரப்பு புகார்..
இந்நிலையில் இந்த அட்ஜஸ்மெண்டுகளும் பாலியல் ரீதியான துன்புறுத்தலும் பெண்களுக்கு மட்டும் அரங்கேறுவதில்லை. ஆண்களுக்கும் அரங்கேரி உள்ளது என்று அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை அண்மையில் இளைஞர் ஒருவர் பரபரப்பு புகாரினை பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் மீது வைத்திருக்கிறார்.
அட பெண்களை விட்டு ஆண்கள் இடையேயும் இது போன்ற விஷயங்கள் நடந்துள்ளதா? என்பதை அறிந்து கொண்ட அனைவரும் அதிர்ச்சியில் இருப்பதோடு இது போன்ற ஒரு நிலையை இது வரை கேட்டதே இல்லை என்று பேசி வருகிறார்கள்.
இந்த சம்பவமானது 2012 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் நடந்ததாக அந்த இளைஞர் கூறினார். அதுவும் மம்முட்டி படத்தின் படப்பிடிப்பு அப்போது நடந்து வந்தது. அந்த சமயத்தில் தான் மலையாளத் திரைப்பட இயக்குனரான ரஞ்சித்தை அந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவன் சந்தித்திருக்கிறார்.
இதனை அடுத்து இயக்குனர் ரஞ்சித் தன்னை பெங்களூரில் இருக்கும் ஹோட்டலுக்கு வர சொன்னதோடு மட்டுமல்லாமல் ஹோட்டலுக்கு சென்ற எனக்கு மதுவினை கொடுத்து அருந்தவும் சொன்னார்.
இதனை அடுத்து மதுவினை அளவுக்கு அதிகமாக ஊத்திக் கொடுத்து குடிக்க வைத்து என் ஆடைகளை களைய வைத்து பாலியல் சீண்டல்களை செய்தார். இதனை அடுத்து விடிய விடிய செ** டார்ச்சர் செய்து துன்பப்படுத்தப்பட்டதாக சொல்லி இருக்கிறார்.
நிர்வாணமாக எடுக்கப்பட்ட புகைப்படம்..
இது போதாது என்று நினைத்த அந்த இயக்குனர் தன்னை நிர்வாணமாக்கி புகைப்படத்தை எடுத்து மேலும் என் வலியை ரணப்படுத்தினார். அத்தோடு அந்த இயக்குனர் நிக்கவில்லை மேலும் என்ன செய்தார் என்று சொன்னால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள்.
அந்த இளைஞரை நிர்வாணமாக்கி எடுத்த புகைப்படத்தை தன் தோழி நடிகைக்கு அனுப்பி வைத்து இருவரும் இணைந்து அந்த புகைப்படத்தை ரசித்தார்கள் என்று கூறிய விஷயம் காது கூசம் அளவு இருந்தது.
இதனை அடுத்து இயக்குனர் ரஞ்சித் மீது எழுந்திருக்கும் இரண்டாவது வழக்காக இதை சொல்லலாம். ஏற்கனவே ஒரு வழக்கு புகார் இருக்கக்கூடிய நிலையில் தற்போது இளைஞர் ஒருவர் மீண்டும் ரஞ்சித்தின் விசயத்தில் புகார் அளித்திருப்பது மலையாள திரை உலகை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
ஆண்களுக்குமா இப்படி?
இதைத்தொடர்ந்து பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்குமா? மலையாளத் திரை உலகில் பாதுகாப்பு இல்லை என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
இந்த சம்பவம் ஒரு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் போலீஸில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹேமா கமிட்டி வெளி வந்த பிறகு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள் மீது அடுக்கடுக்காக இது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த விஷயத்தில் மாபியா கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சொல்லப்படுவது. ஒரு கடுமையான அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் முகேஷ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முகேஷ் மீது கொடுக்கப்பட்ட புகாரில் நடிகைகளின் ரகசிய வாக்குமூலம் அவருக்கு தண்டனை பெற்றுத் தரலாம் என்று சொல்லப்படுகிறது.
விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை..
மேலும் முகேஷ் குறித்து எழுந்திருக்கும் புகாருக்கு அவர் எந்த விதத்திலும் விசாரணை குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுக்காததை எடுத்து இவர் மீது சந்தேகம் அதிகரித்து உள்ளது.
இதனை அடுத்து தற்போது முகேஷ் வசித்து வரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் அம்மா அமைப்பில் இருக்கும் சில நடிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
என்னும் விடிய விடிய ஆண் நபர் ஒருவரை செ** டார்ச்சர் செய்த இயக்குனர் ரஞ்சித், அந்த நிர்வாண படங்களை தனது தோழியான நடிகைக்கு பகிர்ந்து ரசித்த விஷயம் காது கூசும் அளவிற்கு இருப்பதாக பலரும் பேசி வருகிறார்கள்.