மகா மாரியம்மன் திருக்கோயில், கெடாக், மலேசியா.

வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பக்கால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர  தெய்வத்தை  வேண்டினால் மழை பெய்யும். தமிழில் மாரி என்றால் மழை என்று பொருள். எனவே தான் மாரி அம்மன் என்று பெயரில் அழைக்கப்பட்டது.மாரியம்மன் ஆதிசக்தியின் வடிவமாகும்.

பல நூறாண்டுகளுக்கு முன்னால் அங்கிருந்த தமிழர்களால் இந்த மாரி அம்மன் கோயில் கட்டப்பட்டது.இது மலேசியாவின் ‌சுங்கை பெட்டனி பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய கோயில், அருள் பாலிக்கும் அம்மனின் திருநாமம் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயம் ஆகும்.

சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இக்கோயிலில் காமதேனு வடிவம், பிரம்மாண்ட ஹனுமன் சிலை, கருங்கல்லால் ஆன அழகிய மாரியம்மன் சிலை ஆகியன இக்கோயிலின் தனிச் சிறப்புக்களாக உள்ளது.இக்கோயிலின் கருவறையில் அமைந்துள்ள மாரியம்மன் விக்ரஹம், இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

 பல நாட்களாக கோயில் பராமரிப்பு இன்றி புட்கள் மண்டி காணப்பட்டது பூஜையும் சரிவர நிகழவில்லை இந்த சமயத்தில்தான் நிர்வாகக் குழுத் தலைவராக உள்ள ஜெகா என்பவரின் கனவில் சிவப்பு நிற புடவையில் வந்த மாரியம்மன், தனது கோயிலின் நிலை குறித்து எடுத்துக் கூறி, அதனை சரிசெய்யுமாறு கூறி உள்ளார். காடுகளாக சூழப்பட்ட மாரியம்மன் கோயிலை கனவில் கண்டது முதல் ஜெகாவால் தனது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அந்த கோயிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ஜெகாவில் ஆழ்மனதில் எண்ணம் தோன்றியது. இதன் காரணமாக ஜெகா, புதர்கள் மண்டிய மாரியம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கு நிரம்பி இருந்த புதர்கள், குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஜெகா ஈடுபட்டார். எதிர்பாராத விதமாக அங்கு வந்த மற்றொருவரும் ஜெகாவிற்கு உதவியாக கோயிலை சுத்தம் செய்ய துவங்கினார். மேலும் ஆலயத்தை புதுப்பிக்க 500 ரிங்கிட்களை ஆலய தலைவர் ஜெகாவிடம் அளித்தார். இதனால் தூண்டப்பட்ட ஜெகா, 1.4 மில்லியன் ரிங்கிட் செலவில் ஆலயத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். அதன் பின்னர் சுங்கை பெட்டனி பகுதியில் மிகப் பிரம்மாண்ட, புகழ்பெற்ற ஆலயமாக ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயம் திகழ துவங்கியது.

எண்ணற்ற பக்தர்கள் அம்மனை தரிசிப்பதற்காக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செல்கிறார்கள். மிகச் சிறப்பான முறையில் அனைத்து பூஜைகளும் அருமையாக நடக்கிறது. அம்மனின் அருளைப் பெற்ற வண்ணம் பக்தர்கள்  தங்கள் இல்லங்களை நோக்கிச் சந்தோஷமாக செல்கிறார்கள். 

ஆயிரம் கண்ணுடையாள் வேப்பிலை தான் இவள் மருந்து வேப்பிலைக்காரி யாருக்கும் பயந்தாலும் பயக்காவிட்டாலும் இவளுக்கு பயந்துதான்  இருக்க வேண்டும். ஆயிரம் கண்ணில் ஒரு கண் பார்த்தால் போதும்  அவளின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்று  வருவார்கள்.

மாரி மகமாயி மணிமந்திர சேகரியே ஆயி உமை ஆனவளே ஆதிசிவன் தேவியரே மாயி மகமாயி மாரியம்மா துன்பமெல்லாம் தீர்த்திட சடுதியில் வாருமம்மா எனும் பாடல்களைப் பாடி ஆடி மாதத்தில் அம்மனை ஆராதனை செய்து எல்லா விதமும் எல்லாவித சௌபாக்கியமும் அடைவோம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …