“வேண்டிய வரத்தை அள்ளி தரும் அதிசயம் மணக்குள விநாயகர்..!” வியக்க வைக்கும் தகவல்கள்…!!

முதன்முதற்கடவுளான விநாயகப் பெருமான் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார். இவருக்கு ஆடம்பரமாக கோயில்கள் தேவையில்லை. அரச மரத்திலும் அன்போடு ஆசியை வழங்கக்கூடிய  அருள் உள்ளம் கொண்டவராக திகழ்கிறார்.

அந்த வரிசையில் இந்தியாவிலேயே மணக்குள விநாயகருக்கும் மட்டும் தான் தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் உள்ளது என்பதை எத்தனை பேருக்கு தெரியும்.

 பிரம்மச்சாரியாக கருதப்படக் கூடிய விநாயகர் பெருமானுக்கு எந்த தலத்தில் தான் திருமணம் நடந்து இருக்கிறது. இந்த தளத்தில் இவர் சித்தி, புத்தி என்று 2 மனைவிமாரோடு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

 பிரான்ஸ் காலனி பகுதியாக இருந்த புதுச்சேரியில் தான் இந்த மணக்குள விநாயகர் இருக்கிறார். மிகச்சிறந்த ஆன்மீக சுற்றுலா தளமாக விளங்கக்கூடிய இந்த மணக்குள விநாயகர் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றும் வியக்கும் வண்ணத்தில் தான் உள்ளது.

 சுமார் 8000 சதுர அடி பரப்பளவில் இந்தக் கோயில் பரந்து விரிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். எந்தக் கோயிலிலும் இல்லாத அளவு மூலவர் இருக்கும் இடம் ஒரு கிணறு உள்ளது.

 மேலும் பீடத்தின் இடது பக்கம் மூலவருக்கு அருகில் ஒரு சிறிய குழி உள்ளது. இந்த குழியின் ஆழத்தை இதுவரை எவரும் அறிய முடியவில்லை. இந்த குழியில் என்றும் வற்றாத நீர் இருப்பதால்தான் இந்த விநாயகரை மணக்குள விநாயகர் என்று அழைக்கிறார்கள்.

 இந்த மணக்குள விநாயகரை பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் வழிபட்டதால் இந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரும் உள்ளது.

பலமுறை வெளிநாட்டவர்களால் தாக்கப்பட்ட புதுச்சேரி நகரானது பல போர்களை சந்தித்துள்ளது. அந்த நிலையில் இந்த மணக்குள விநாயகர் ஆலயம் எந்த சேதமும் அடையாமல் தப்பியது வியப்புக்குரிய நிகழ்வாகவே உள்ளது.

 1957 ஆம் ஆண்டு கோயில் கொடி மரத்துக்கு வடநாட்டு தொழிலதிபர் தங்க முலாம் பூசிய தகடுகளை வேய்ந்துள்ளார்.ஆவணி மாதம் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவத்தை அனைவரும் சீரும் சிறப்புமாக எடுத்துச் செய்கிறார்கள்

 இடம்புரி விநாயகராக திகழும் மணக்குள விநாயகர் திசை நோக்கி அருள் பாலித்து வருவதால் எல்லாவித செல்வங்களையும் வாரி வழங்கக் கூடிய ஆற்றல் மிக்கவ.ர் சங்கட சதுர்த்தி அன்று சிறப்பு பூஜைகள்  கோயிலில் நடைபெறும்.

ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி எங்கு மிகப் பிரபலமான விழாக்களில் ஒன்று மாலை நேரத்தில் கொழுக்கட்டை படையல் அளித்து இந்த விழாவை கொண்டாடுவார்கள்.

 ஆகம விதிப்படி அணைக்கப்பட்டுள்ள இந்த மணக்குள விநாயகர் கோயில் ஆனது உற்சவமூர்த்திக்கு சுமார் 5 கிலோ தங்கத்தில்  தங்க கவசம் இவருக்கு உள்ளது.

 கடற்கரையை ஒட்டிய பகுதியில் இந்தப் பிள்ளையார் நின்று அருள் பாலிப்பதால் இவரை புவனேஸ் கணபதி என்றும் அழைக்கிறார்கள்.

பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை தீர்ப்பதற்காக  பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் விபூதி சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் செய்வது வழக்கம்.மேலும் இங்கு சொர்ணாபிஷேகம் 108 கணக்கு கலசங்கள் வைத்து செய்யப்படும் சங்காபிஷேகம் சிறப்பானது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …