“வேண்டியது கிடைக்க மண்டைக்காட்டு பகவதி..!” – தரிசனம் செய்யுங்க..!

 மண்டைக்காட்டு பகவதி அம்மனின் ஆலயமானது கன்னியாகுமரி மாவட்டம் குலச்சல் அருகே உள்ள ஊரில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மண்டைக்காட்டு பகவதியோடு காமாட்சி, மீனாட்சி ,இசக்கி, முத்துமாரி என பல தெய்வத்தின் உருவங்கள் வழிபாட்டில் வழிபட்டு வரப்படுகிறது.

 இது புற்று உள்ள கோயில் என்பதால் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தப் புற்றானது சுமார் 15 அடிக்கு மேல் உயர்ந்து நிற்கிறது. இந்த புற்றின் மேல் தான் அம்மன் அமர்ந்து அருள் பாலித்து வருகிறாள்.

மேலும் அம்மனின் முகமானது சந்தனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலுக்கு அதிக அளவு பெண்கள் வந்து செல்கிறார்கள்.

 சபரிமலைக்கு எப்படி ஆண்கள் விரதம் இருந்து செல்கிறார்களோ அதுபோல இங்கு நடக்கக்கூடிய மாசி கொடை திருவிழாவில் 41 நாட்கள் பெண்கள் பயபக்தியுடன் விரதம் இருந்து இருமுடி கட்டி எந்த அம்மனை தரிசிக்க வருகிறார்கள்.

 இந்தக் கோயிலுக்கு வருபவர்களுக்கு கல்யாண வரம், குழந்தை வரம்,உடல் உறுப்புகளில் குறைபாடுகள் இருந்தால் அதை நீக்குதல், கண் திருஷ்டி, தோஷம், தலைவலி போன்றவை விரைவில் குணமாகும்.

இந்த கோயிலில் கொடுக்கப்படும் மண்டையப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மண்டையப்பத்தை தான் அம்மனுக்கு நைவேத்தியம் செய்து அனைவருக்கும் வினியோகிக்கிறார்கள்.

 இந்தக் கோயிலின் தல விருச்சமாக வேப்பமரம் உள்ளது.இங்கு செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவு பக்தர்கள் வந்து மண்டைக்காட்டு பகவதி அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

இது மட்டும் அல்ல பௌர்ணமி நாட்களில் அதிக அளவு கூட்டம் இங்கு கூடும். அம்மனை நினைத்து நீங்கள் உங்களுக்கு எது வேண்டுமோ அதை கேட்டால் கட்டாயம் கொடுப்பாள் என்ற நம்பிக்கையில் தான் இன்று வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலை நோக்கி படை எடுத்து வருகிறார்கள்.

நீங்களும் உங்கள் எண்ணம் ஈடேற வேண்டும் என்றால் ஒரு முறை மண்டைக்காட்டு பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று உங்கள் கோரிக்கையை வைத்துப் பாருங்கள். கட்டாயம் அம்மன் நிறைவேற்றித் தருவாள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …