போடு தக்காளி.. கலர் மாறிய தக் லைஃப்.. தாறுமாறாக எகிறிய எதிர்பார்ப்பு.. STR என்ட்ரி..!

தமிழ் சினிமாவில் இந்திய அளவில் புகழப்படும் அளவுக்கு பெருமை பெற்ற இயக்குனர்கள் இருக்கின்றனர். நடிகர்கள், நடிகைகள் இருக்கின்றனர். ஒளிப்பதிவாளர்கள், சண்டை பயிற்சியாளர்கள், நடன இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் இருக்கின்றனர்.

ஆனால் அவர்கள், தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு சென்றாலும், ஒரு கட்டத்துக்கு பிறகு மீண்டும் தாய் வீடு திரும்புவது போல, தமிழ் சினிமாவுக்கே திரும்பி வந்து தங்களது கலை பணியை துவங்குகின்றனர்.

நாயகன்

கடந்த 1987 களில் வெளியான நாயகன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. குறிப்பாக வேலு நாயக்கர் கேரக்டரில் கமல்ஹாசன் வாழ்ந்து காட்டியிருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் இந்த படம் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்திற்கு பிறகு மணிரத்னமும், கமல்ஹாசனும் இணையவில்லை.

சின்ன மாமனார்

அது மட்டுமின்றி, நடிகர் கமல்ஹாசனும், மணிரத்னமும் நெருங்கிய உறவினர்கள். ஏனெனில் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மகள் சுகாசினியை தான் மணிரத்னம் திருமணம் செய்து இருக்கிறார். மணிரத்னத்தின் சின்ன மாமனார் தான் கமல்ஹாசன்; அதுபோல் கமல்ஹாசனின் மருமகன்தான் மணிரத்னம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது மணிரத்னமும் கமலும் நெருக்கமாக பேசிக்கொண்டு, தங்களது பழைய உறவை புதுப்பித்துக் கொண்டனர்.

தக்லைப் படப்பிடிப்பு

இதையடுத்து தக்லைப் படம் மீண்டும் மனிரத்னம், கமல் கூட்டணியில் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
இந்த படத்தில் நடிப்பதாக இருந்த துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் வெளியேறி போய்விட்ட நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வந்தன.

நாயகன் படத்தின் வெற்றிக்கு பிறகு, 37 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் கூட்டணியின் மீண்டும் இணைந்துள்ள தக்லைப் படப்பிடிப்பு, தற்போது டெல்லியில் பரபரப்பாக நடந்து வருகிறது.

 

டெல்லியில்…

டெல்லியில் நடந்து வரும் படப்பிடிப்பில் நடிகர் சிம்பு பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே தக்லைப் படத்தில் சிம்பு நடிப்பதாக படக்குழுவினர் அதிகரிப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தரப்பில் அறிமுக டீசர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

புழுதி பறக்க காரில்…

அதில் எல்லையைக் காக்கும் பேட்ரோல் வாகனம் ஒன்றில் புழுதி பறக்க காரில் வரும் சிம்பு கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு யாரையோ சுடுவது போல் ஒரு வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலாகி ட்ரெண்டிங் ஆகி உள்ளது.

STR மாஸ் என்ட்ரி

மேலும் இந்த ஆண்டு இறுதியில் தக்லைப் படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாநாடு படத்துக்கு பிறகு நீண்ட நாட்களாக சிலம்பரசன் படம் இல்லாமல் தவித்து வரும் ரசிகர்களுக்கு, தக்லைப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்திருப்பது, பெரிய அளவில் உற்சாகத்தை தந்துள்ளது

கலர் மாறிய தக் லைஃப் படத்தில், தாறுமாறாக எகிறிய ரசிகர்களின் எதிர்பார்ப்பில், STR மாஸ் என்ட்ரி படத்துக்கு மிகப்பெரிய உற்சாக டானிக் ஆக மாறியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version