கேமரா வச்சதும் பாத்ரூம்ல.. கார்த்திக் போதை ஊசி போட்டு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த தயாரிப்பாளர்களில் முக்கியமானவர்கள் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். தமிழில் எக்கச்சக்கமான வெற்றி திரைப்படங்களை இவர் கொடுத்திருக்கிறார். அதே போல இவரது திரைப்படங்கள் சில தோல்வி திரைப்படங்களாகவும் அமைந்திருக்கின்றன.

மாணிக்கம் நாராயணனை பொறுத்தவரை அவர் ஒரு தயாரிப்பாளர் என்றும் சினிமாவில் பிரபலமானவர் என்றும் பெரும்பாலும் பலருக்கும் தெரியாது. சமூக வலைதளங்களின் வளர்ச்சி வந்த பிறகுதான் இவர் நிறைய youtube பேட்டிகளில் பேச தொடங்கினார்.

கேமரா வச்சதும் பாத்ரூம்ல

அப்பொழுதுதான் இவர் கமல்ஹாசன் நடித்த பிரபல திரைப்படமான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் என்பதே தெரிந்தது. மேலும் தற்சமயம் அஜித்தை வைத்து விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் மகிழ்திருமேனியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவரும் மாணிக்கம் நாராயணன்தான்.

அதே சமயம் மாணிக்கம் நாராயணன் எப்பொழுதுமே பேசும் பொழுது திரைத்துறை சார்ந்திருக்கும் பல விஷயங்களை வெளிப்படையாக பேசக்கூடியவர். அவற்றில் பல விஷயங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

உதாரணத்திற்கு அஜித் ஒருமுறை ஒரு படத்தை நடித்து கொடுப்பதாக கூறி மாணிக்கம் நாராயணனிடம் அட்வான்ஸ் தொகை வாங்கியதாகவும் அந்த அட்வான்ஸ் தொகையை திரும்பத் தரவில்லை படமும் நடித்தும் கொடுக்கவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டை வெளிப்படையாகவே வைத்திருந்தார் மாணிக்கம் நாராயணன்.

கார்த்திக் போதை ஊசி போட்டு

இந்த மாதிரி நிறைய சர்ச்சையான விஷயங்களை இவர் பேசுவதுண்டு விஜய் குறித்து மிகவும் நெகிழ்ச்சியான ஒரு விஷயத்தை இவர் பேசியிருந்தார் இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படத்தை அவர் தயாரித்த பொழுது இந்த திரைப்படம் வெற்ற பெறுவது கஷ்டம்தான் என அவருக்கு தெரிந்து விட்டது.

இந்த நிலையில் படத்தை வெற்றி பெற வைப்பதற்காக அந்த படத்தின் விழாவில் பெரும் நடிகர்களை வரவழைக்கலாம் என்று நினைத்தார். எனவே சூர்யா, சிம்பு, விஜய் 3 பேருக்குமே போன் செய்து பேசியிருந்தார். விஜய் ஆரம்பத்தில் வரவில்லை என்று கூறினாலும் கூட விழா நடந்த அன்று அந்த இடத்திற்கு விஜய் வந்து விட்டார்.

அது என்னை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்தது என்று கூறி இருக்கிறார் மாணிக்கம் நாராயணன். மேலும் மாணிக்கம் நாராயணன் கூறும் பொழுது நடிகர் கார்த்தி படபிடிப்பு தளங்களுக்கு எப்பொழுதுமே தாமதமாக வரக்கூடியவர். அவர் போதை ஊசி போட்டுக்கொள்வதால் காலையில் தாமதமாக எழுவார் என்று சிலர் கூறுவதுண்டு. அதனாலேயே அவர் நிறைய பட வாய்ப்புகளை இழந்துள்ளார். அவரை வைத்து திரைப்படம் தயாரிப்பது கடினம் என்று கூறியிருந்தார்.

அதேபோல இயக்குனர் மணிரத்தினம் பற்றி கூறும் பொழுது நிறைய தவறுகளை மணிரத்தினம் செய்திருக்கிறார். அவரது அண்ணன்தான் மணிரத்தினத்தை உயர்த்திவிட்டார். ஆனால் வளர்ந்த பிறகு அவரது அண்ணனுக்கு படம் செய்து தர முடியாது என்று கூறிவிட்டார். அதே போல படப்பிடிப்பு நடக்கும்போது பாத்ரூம் செல்கிறேன் என படப்பிடிப்பை தாமதப்படுத்துவார் மணிரத்தினம் என்று கூறியிருக்கிறார் மாணிக்கம் நாராயணன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version