அப்பா மரணம்.. முழு குடி.. ஏமாற்றிய மலேசிய பெண்.. பாய்ஸ் மணிகண்டனுக்கு இம்புட்டு சோகமா..?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் படத்தில் நடித்த இளைஞர்களுக்கு முக்கியமான திரைப்படம் என்று கூறலாம். சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த சில இளைஞர்களை வைத்து எடுத்த திரைப்படம்தான் பாய்ஸ்.

கிட்டத்தட்ட சென்னை 28 திரைப்படமும் அப்படி வெங்கட் பிரபு செய்த முயற்சிதான். ஆனால் சென்னை 28 திரைப்படத்தில் நடித்த பிறகு அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. ஆனால் பாய்ஸ் திரைப்படத்தை பொருத்தவரை அதில் நடித்தவர்களுக்கு அந்த படம் மூலம் அப்படி ஒன்றும் பெரிதாக வரவேற்பு கிடைத்துவிடவில்லை.

ஒரு சிலருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைத்தாலும் கூட அந்த எதுவுமே பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக கிடைத்ததில்லை. ஏனெனில் இயக்குனர் ஷங்கருக்கே அது ஒரு தோல்வி படமாகதான் அமைந்திருந்தது.

ஷங்கர் படம்:

இயக்குனர் ஷங்கர் இயக்கத்திலேயே அவர் இயக்கியதுதானா என்று சந்தேகப்படும் வகையில் இருக்கும் ஒரு திரைப்படம்தான் பாய்ஸ்.  சர்ச்சையை கிளப்பும் வகையில் அந்த திரைப்படம் இருந்ததாகவும் முகம் சுளிக்கும் வகையில் இருந்ததாகவும் அப்பொழுது அந்த திரைப்படம் குறித்து நிறைய குற்றச்சாட்டுகள் இருந்தன.

அதுவும் பிரமாண்ட படங்களை இயக்கும் இயக்குனர் ஷங்கர் இப்படி ஒரு படத்தை இயக்கியிருக்கிறாரே என்று பலரும் பேசி இருந்தனர். ஆனால் நடிகர் சித்தார்த்திற்கு அது ஒரு முக்கியமான படமாக இருந்தது அந்த திரைப்படத்தில் நடித்தவர்களில் ஜெனிலியா, பரத், சித்தார்த், நகுல், தமன் உள்ளிட்ட ஐவரும் அதிக பிரபலமானார்கள்.

அவர்களுக்கு நிறைய வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனால் அதே திரைப்படத்தில் அந்த நண்பர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர்தான் நடிகர் மணிகண்டன். ஆனால் அவரது வாழ்க்கையில் என்ன ஆனது என்பது பலரும் அறியாத ஒரு விஷயமாகும்.

மணிகண்டனுக்கு நடந்த நிகழ்வு:

பாய்ஸ் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த திரைப்படம் கிச்சா வயசு 16 என்கிற திரைப்படம். அந்த திரைப்படம் சர்ச்சைக்கு உள்ளான ஒரு திரைப்படமாக இருந்தது. அதனை தொடர்ந்து சருக்கல்களை சந்திக்க துவங்கினார் மணிகண்டன்.

தற்சமயம் அவர் விஜய் சேதுபதியின் 50 ஆவது திரைப்படமான மகாராஜா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார். ஒரு பேட்டியில் மணிகண்டன் கூறும் பொழுது யுவா என்கிற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது எனது அப்பா இறந்துவிட்டார்.

அப்பாவால் அதிக கடன் உருவாகிவிட்டது அந்த கடனை அடைப்பதற்காக நான் வேறு வேலைக்கு செல்ல துவங்கினேன். அதனை தொடர்ந்து வாழ்க்கையில் நிறைய கஷ்டம், துயரம், ஏமாற்றம், தோல்வி ஆகியவற்றை கடந்து வந்துள்ளேன்.

ஒரு காலத்தில் பகல் முழுவதும் குடிப்பதுதான் எனது வேலையாகவே இருந்தது. ஒரு மலேசிய பெண் என்னை ஏமாற்றியதுதான் அதற்கு காரணம். இப்பொழுது எனக்கு 42 வயதாகிறது. ஆனால் நான் சரியாக இருக்கிறேனா என்று தெரியவில்லை என்று தனது வாழ்க்கை கஷ்டங்களை பகிர்ந்து இருக்கிறார் மணிகண்டன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version