இந்த தமிழ் நடிகருடன் நடித்ததால், என் சினிமா வாய்ப்புகள் பறிபோனது – கண்ணீர் விடும் மனீஷா கொய்ராலா..!

மணிரத்னம் இயக்கிய மும்பை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மனீஷா கொய்ராலா. மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த உயிரே படத்திலும், இவர்தான் கதாநாயகி. ஷங்கர் இயக்கிய முதல்வன், இந்தியன் படங்களிலும், மனீஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்தார்,

தமிழ் சினிமாவின் ஸ்டார் இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடித்த மனிஷா கொய்ராலா, மிக விரைவிலேயே, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில், கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதேபோல், பாபா படத்திலும், ரஜினிக்கு ஜோடியாக இவர் நடித்தார்.

ஆனால், ரஜினி படங்களிலேயே மிக மோசமான தோல்வியை தழுவிய படம் பாபா தான். ஆன்மீக கருத்துகளை மையமாக கொண்ட இந்த படத்தில், அதிரடி காட்சிகளை எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த படத்தால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்களுக்கு, பட வினியோகஸ்தர்களுக்கு ரஜினி பணத்தை திருப்பிக்கொடுத்தார் என்பது, அந்த காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த படத்தின் படுதோல்விக்கு பிறகு, தமிழ் சினிமாவில் மனிஷா கொய்ராலாவுக்கு பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்துபோனது. மற்ற மொழி படங்களிலும், அவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனால், பட வாய்ப்புகள் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் மனிஷா கொய்ராலா.

இதுபற்றி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மனிஷா கொய்ராலா, பாபா படத்தின் தோல்வியால், கடுமையாக பாதிக்கப்பட்டது நான்தான். ரஜினியுடன் நடித்த இந்த படம் சரியாக போகாததால், எனக்கு அதற்கு பிறகு கதாநாயகியாக நடிக்கும் பட வாய்ப்புகளே இல்லாமல் போய் விட்டது, இதற்கு காரணம்,

ரஜினி நடித்த படத்தில் நான் நடித்ததுதான். இதனால், என் சினிமா வாழ்க்கையே பாதிக்கப்பட்டு விட்டது, என புலம்பித் தீர்த்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …