குடிக்கு அடிமை.. பேஸ்புக் காதல் தோல்வி.. மனிஷா கொய்ராலாவின் கண்ணீர் கதை..!

தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் மிக முக்கியமான ஒரு நடிகை மனிஷா கொய்ராலா. அவர் தமிழில் குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார் என்றாலும், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிஷா கொய்ராலா

நடிகை மனிஷா கொய்ராலா 1989 ஆம் ஆண்டில் பெரி பெத்தவுலா என்ற நேபாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருக்கிறார்.

பம்பாய் படத்தில் நடித்தார்

நேபாளம் நாட்டில் பிறந்தவர் மனிஷா கொய்ராலா. கடந்த 1991 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சவுதாகர் என்ற படத்தில் நடித்து இந்திய சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்த அவர், 1995 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பம்பாய் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு அர்ஜுன் ஹீரோவாக நடித்த முதல்வன், ஷாருக்கான் ஜோடியாக நடித்த உயிரே, கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் மற்றும் ஆளவந்தான், நடிகர் ரஜினிகாந்த் உடன் பாபா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்ததால் மனிஷா கொய்ராலா பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்டார்.

நடிகை மனிஷா கொய்ராலா குறித்து, மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது,

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில், பம்பாய் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் மனிஷா கொய்ராலா. இந்த படத்தில் அந்த கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா தான் நடிக்க வேண்டும் என மணிரத்தினம் பிடிவாதமாக இருந்தார்.

நடிக்க மறுப்பு

ஆனால் பம்பாய் படத்தின் கதையை கேட்ட மனிஷா கொய்ராலா, இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா கேரக்டர் என்று சொன்னதால், இந்த படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டார்.

அதன் பிறகு பலரும் மணிரத்னம் பெரிய இயக்குனர், இந்திய அளவில் பேசப்படும் முக்கிய இயக்குனர் என்று சொன்னதால், அவர் பம்பாய் படத்தில் நடிக்க சம்மதித்தார். அந்த படத்தில் நடித்த பிறகு மனிஷா கொய்ராலா மிக பிரபலமானார். தொடர்ந்து அவருக்கு நிறைய படங்கள் வாய்ப்புகள் குவிந்தது.

இதையும் படியுங்கள்: விமானத்திலேயே படு மோசமான போஸ்.. கேமராவை தொப்புளுக்கு கீழே வைத்து.. திணறடிக்கும் வேதிகா…!

பேஸ்புக் காதல் திருமணம்

மனிஷா கொய்ராலா எந்த அளவுக்கு பிரபலமானானரோ அதைவிட பல மடங்கு கிசுகிசுக்களில் சிக்கினார். குறிப்பாக பேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த மண வாழ்க்கையும் பாதியில் முடிந்து போனதால் மன அழுத்தத்தில் இருந்த மனிஷா கொய்ராலா குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.

மதுப்பழக்கம்

குறிப்பாக இந்தியன் படத்தில் நடித்த போது அந்த படப்பிடிப்பில் தன்னையே மறந்து போகும் அளவிற்கு மனிஷா கொய்ராலா அதிக அளவில் மது போதையில் இருந்தார். நடிகர் விக்ரமின் மனைவி தான் மனிஷா கொய்ராலாவுக்கு கவுன்சிலிங் தந்து அவரை கொஞ்சம் மாற்றினார்.

இதையும் படியுங்கள்: என் முதல் காதலன் கொடுத்த வலி.. நடிகை வித்யா பாலன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

புற்றுநோய் பாதிப்பு

ஒரு வழியாக குடிப்பழக்கத்தில் இருந்து மீண்ட மனிஷா கொய்ராலா, புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு நேபாளம் சென்று அவர் புற்று நோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

விபச்சாரத்தை ஒழித்தார்

அந்த நேரத்தில் அவர் செய்த மிகச்சிறந்த ஒரு காரியம், சிறுமிகளை வைத்து நேபாளத்தில் நடந்த விபச்சாரத்தை முக்கால்வாசி ஒழித்தார். கிட்டத்தட்ட நூறு புரோக்கர்கள் வரை சட்டத்தின் பிடியில் சிக்குவதற்கு காரணமாக இருந்தார் என்று மனிஷா கொய்ராலா குறித்து குடிக்கு அடிமையானது, பேஸ்புக் காதல் தோல்வி என அவரது கண்ணீர் கதையை சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version