வில்லன் நடிகருடன் டேட்டிங்.. 2 வருடத்தில் விவாகரத்து.. அந்த ஒரு பழக்கத்தால் சீரழிந்த நடிகை..!

சினிமாவில் சிறப்பான எதிர்காலம் அமைந்தும் அதை சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல் தவறாமல் சகவாசங்களால் வாழ்க்கையை தொலைத்துக்கொண்ட நடிகைகள் சிலர் உள்ளனர். அதில் ஒருவர்தான் மனிஷா கொய்ராலா.

மனிஷா கொய்ராலா

நேபாளம் நாட்டைச் சேர்ந்த மனிஷா கொய்ராலா ராஜ குடும்பம் சார்ந்தவர். கடந்த 1989 ஆம் ஆண்டு பெரி பேட்வுலா என்ற நேபாள மொழி படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 1991 சௌடேகர் என்ற இந்தி படத்தில் மனிஷா கொய்ராலா அறிமுகமானார். இந்த படத்தில் இவர் சிறந்த நடிகையாக பாராட்டப்பட்டார்.

அதைத் தொடர்ந்து சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கான், அக்சய் குமார் உள்ளிட்ட முக்கிய பாலிவுட் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த மனிஷா கொய்ராலா முன்னணி நடிகையாக மாறினார்.

 

பம்பாய் படத்தில் அறிமுகம்

தமிழில் மனிஷா கொய்ராலா அறிமுகமான படம் பம்பாய். மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக இந்த படத்தில் நடித்தார். பம்பாய் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தில் கமலுக்கு ஜோடியாகவும், முதல்வன் படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாகவும், அதையடுத்து பாபா படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் மனிஷா கொய்ராலா நடித்தார்.

தமிழில் டாப் ஹீரோக்கள்

இப்படி கமல், ரஜினி, அர்ஜூன், அரவிந்த் சாமி என முன்னணி டாப் நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து இந்தி படங்களில் மனிஷா கொய்ராலா பிஸியாக இருந்ததால் தமிழில் தொடர்ந்து படங்களில் அவர் நடிக்கவில்லை.

நானா படேகர்

இந்நிலையில், பிரபல வில்லன் நடிகர் நானா படேகரை, மனிஷா கொய்ராலா காதலித்தார். கடந்த 1996ல் அக்னி சாக்‌ஷி என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடித்த போது அவருக்கும் மனிஷா கொய்ராலாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் டேட்டிங்கில் இருந்துள்ளனர்.

பிறகு இதை நானா படேகரும் ஒத்துக் கொண்ட நிலையில், சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பிரிந்தனர்.

பலருடன் டேட்டிங்

இதைத்தொடர்ந்து மனிஷா கொய்ராலா இந்தி நடிகர்கள், சில தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களுடன் டேட்டிங்கில் இருந்து வந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து பகிரங்கமாக அவர் எங்கும் ஒப்புக்கொள்ளாத போதும், அவர்களுடன் இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிய விஷயங்கள் என்று இதை உறுதிப்படுத்துகின்றன.

திருமணமாகி 2 ஆண்டுகளில் விவாகரத்து

இதற்கிடையே அவர் சாம்ராஜ் டால்ஹா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே அவருடன் குடும்பம் நடத்திய நிலையில் மனிஷா கொய்ராலா அவரை விட்டு பிரிந்து விட்டார்.

மது, புகைப்பழக்கத்தால் புற்றுநோய்

தொடர்ந்து மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களில் இருந்த மனிஷா கொய்ராலாவுக்கு ஒரு கட்டத்தில் புற்றுநோய் ஏற்பட்டது. பிறகு தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று, புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த அவர், இப்போது 53 வயதில் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு சேவையிலும், சமூக சேவையிலும் மனிஷா கொய்ராலா ஆர்வமாக இப்போது ஈடுபட்டு வருகிறார்.

சீரழிந்த நடிகை

வில்லன் நடிகர் நானா படேகருடன் டேட்டிங், திருமணமாகி 2 வருடத்தில் விவாகரத்து, மதுப்பழக்கத்தால் சீரழிந்த நடிகை மனிஷா கொய்ராலா, இப்போது தனிமையில் ஒரு சமூக சேவகியாக தன்னை மாற்றிக்கொண்டு இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version