பணம் இருந்துச்சு.. தூங்கும் முன் அந்த பழக்கம் இருந்துச்சு.. ஆனா.. மனிஷா கொய்ராலா கண்ணீர்..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அங்கீகாரத்தையும் பெற்றுவிடுகின்றனர். அதுவும் முன்னணி கதாநாயகர்கள், பெரிய இயக்குனர்கள் படங்களில் நடிக்கும் போது அவர்களது இமேஜ் பெரிய அளவில் உயர்ந்து விடுகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் அவர்கள் சென்றடைந்து விடுகின்றனர்.

மனிஷா கொய்ராலா

பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா, தமிழில் பம்பாய் என்ற படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை டைரக்டர் மணிரத்னம் இயக்கியிருந்தார். பம்பாய் படத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ரஜினி, கமலுடன்…

இந்த படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த அவர், தொடர்ந்து பாபா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அதேபோல் ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்திலும் மீண்டும் மனிஷா கொய்ராலா ஜோடியாக நடித்திருந்தார். அவரும் ஷாருக்கானும் நடித்த உயிரே படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

பலருடன் நெருங்கிய தொடர்பு

ஆனால் தொடர்ந்து அவர், தமிழ் படங்களில் நடிக்காத நிலையில் மீண்டும் இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தினார். இந்தியில் ஷாருக்கான், சல்மான் கான், அனில் கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த மனிஷா கொய்ராலா ஒரு காலகட்டத்தில், நிறைய தொழிலதிபர்களுடன் நட்பு கொண்டார்.

அடிக்கடி சில நடிகர்களுடன் டேட்டிங் சென்றதாகவும் கூறப்படுகிறது அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளிவந்தன.

பேஸ்புக் நண்பருடன் திருமணம்

இதை எடுத்து பேஸ்புக் மூலம் பழகிய ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், பின்னர் சில ஆண்டுகளில் அவரை விலகினார். இதற்கிடையே இந்தி நடிகர் நானா படேகருடன் மனிஷா கொய்ராலா நெருங்கிய காதலில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதை இருவருமே மறுக்கவில்லை.

ஒரு கட்டத்தில் மனிஷா கொய்ராலா மதுபான பழக்கத்திற்கு ஆளானார். ஷூட்டிங் வரும்போது கூட அவர் குடிபோதையில் இருப்பதை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மது அருந்தும் பழக்கம் இருந்தது

இதுகுறித்து நடிகை மனிஷா கொய்ராலா ஒரு நேர்காணலில் கூறியதாவது,
என்னிடம் நிறைய பணம் இருந்தது. தூங்கும் முன் மது அருந்தும் பழக்கமும் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் மது அருந்தினால் தான் எனக்கு தூக்கமே வரும் அந்த அளவுக்கு மதுவுக்கு நான் அடிமையாக இருந்தேன்.

கூச்சப்படாமல் இருப்பதற்காக..

ஆரம்பத்தில் திரைப்படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் கூச்சப்படாமல் நடிக்க வேண்டும் என்பதற்காக, மது பழக்கத்தை ஆரம்பித்தேன். அது நாளடைவில் என்னை அடிமையாக்கியது. மது இல்லாமல் தூங்கவே முடியாது என்ற நிலையில் எல்லாம் இருந்தேன்.

புற்றுநோய் வந்தது

அதன் காரணமாக நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். பணம் இருந்தது புற்றுநோய் வந்தது. ஆனால் எனக்கு சொந்தம் என சொல்லிக்கொள்ள யாருமே இல்லை. யாரும் வரவில்லை என வேதனை பொங்க தெரிவித்திருக்கிறார் நடிகை மனிஷா கொய்ராலா.

பணம் இருந்துச்சு.. தூங்கும் முன் மதுபானம் குடிக்கும் பழக்கம் இருந்துச்சு.. ஆனா, எனக்குன்னு யாரும் இல்லை என்று மனிஷா கொய்ராலா கண்ணீர் விட்டு தன் வாழ்க்கை துயரங்களை ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version