இளம் வயதில்.. தூங்கும் முன்.. இந்த பழக்கம் இருந்துச்சு.. வெக்கமின்றி கூறிய மனிஷா கொய்ராலா..!

நடிகை மனிஷா கொய்ராலா, கடந்த 1990களில் மணிரத்னம் படங்களின் நாயகியாக இருந்தார்.

மனிஷா கொய்ராலா

அரவிந்த் சாமியுடன் பம்பாய், ஷாருக்கானுடன் உயிரே ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாபா படத்திலும், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்திலும் மனிஷா கொய்ராலா நடித்திருந்தார்.

தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில், மாமியார் கேரக்டரில் அதாவது கதாநாயகி ஹன்சிகா மோத்வானியின் பணக்கார தாயாக நடித்திருப்பார்.

அதுமட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் ஜோடியாக முதல்வன் படத்திலும் கதாநாயகி மனிஷா கொய்ராலா தான்.

டாப் ஸ்டார் நடிகர்கள்…

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களான ரஜினி, கமல், அர்ஜூன், அரவிந்த் சாமி போன்றவர்களின் படங்களில் நடித்த வகையில், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.

பம்பாய், உயிரே, முதல்வன், இந்தியன் என மனிஷா கொய்ராலா நடித்த படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. அதுவும், பாபா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பிறகு மனிஷா கொய்ராலா தமிழ் சினிமாவில் இன்னும் பலமடங்கு பிரபலமானார்.

தவறான பழக்கங்கள்…

ஆனால் இந்தி படவுலகை சேர்ந்தவர்கள் என்பதால், தவறான சகவாசங்களும், தவறான பழக்கங்களும் நடிகர்களுக்கு நடிகைகளுக்கு அது மிக எளிதாக பழக்கம் வந்து விடுகிறது.

அதைப்பற்றி ஒரு நேர்காணலில் வெளிப்படையாகவே மனிஷா கொய்ராலா கூறியிருக்கிறார்.

நடிகை மனிஷா கொய்ராலா சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், நான் கேன்சர் வியாதியுடன் போராடி வெற்றி பெற்றேன்.
எனக்கு இளம் வயதில் இருந்த கெட்ட பழக்கங்கள் தான் இதற்கு காரணம்.

மது குடிக்க ஆரம்பித்தேன்

சினிமாவில் கேமராவின் முன்பு தோன்றும் பொழுது பயம் இருக்கக் கூடாது என்பதற்காக சிறிய அளவில் மது குடிக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் அதுவே எனக்கு பழக்கமாகிவிட்டது.

எனக்கு இருந்த நண்பர்கள் இவையெல்லாம் நான் செய்வது தவறு என்ற இந்த விஷயத்தை எனக்கு நினைவுபடுத்தவே இல்லை.

ஆரம்பத்தில் சிறிய அளவில் ஆரம்பித்த மதுபழக்கம் இரவு தூங்கும் முன்பு மது குடித்தால் தான் தூக்கம் வரும் என்ற அளவுக்கு மாறிவிட்டது.

அடிமையாக இருந்தேன்…

இதனால் இரவு தூங்கும் முன் மது பழக்கத்திற்கு அடிமையாக நான் இருந்தேன்.

ஒரு கட்டத்தில் புற்றுநோய் வந்த போதுதான் எனக்குள் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இப்படியான பழக்கங்களை கைவிட்டேன் என கூறி இருக்கிறார் மனிஷா கொய்ராலா.

இளம் வயதில்.. தூங்கும் முன்.. மதுப்பழக்கம் இருந்துச்சு என்று வெக்கமின்றி என்று மனிஷா கொய்ராலா கூறியதை கேட்டு, இன்னும் என்னென்ன பழக்கங்கள் இருந்ததோ, என கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version