நேபாள நாட்டில் பிறந்து வளர்ந்த நேபாள இந்திய நடிகையான மனிஷா கொய்ராலா ஹிந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் ஒன்று இரண்டு படங்களில் நடித்த இவருக்கு ஏராளமான தென்னிந்திய ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவருக்கு பரதநாட்டியம், மணிப்புரி போன்ற நடனத்தை நன்கு கற்று அறிந்தவர். ஆரம்ப நாட்களில் நேபாள மொழி படத்தில் நடித்த இவரது முதல் படம் ஃபெரி பெட்டாலா என்ற நேபாளி படம் தான்.
நடிகை மனிஷா கொய்ராலா..
இதனை அடுத்து நடிகை மனிஷா கொய்ராலா 1991 ஆம் ஆண்டு ஹிந்தி படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் சௌடாகர் என்ற திரைப்படம் தான் இவரது முதல் ஹிந்தி திரைப்படமாக அமைந்தது.
அந்த வகையில் பல ஹிந்தி படங்களில் நடித்த இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு 1995 ஆம் ஆண்டு கிடைத்தது. மேலும் இவர் மணிரத்தினம் இயக்கிய பம்பாய் திரைப்படத்தில் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவருக்கு முதல்வன், உயிரே, இந்தியன், ஆளவந்தான் போன்ற தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்த படத்தை தக்க முறையில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.
போதையில் இருந்தால்தான் கரெக்டா..
சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை மனிஷா கொய்ராலா அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி போட்டோக்களையும், வீடியோக்களையும் இணைய பக்கத்தில் வெளியிடுவார்.
இந்நிலையில் மனிஷா கொய்ராலா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது எப்படி உங்களுக்கு மதுப்பழக்கம் எப்போது ஆரம்பமானது. அதனை எப்போது நிறுத்தினீர்கள். எப்படி நிறுத்தினீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை மனிஷா கொய்ராலா மது குடிப்பதற்கு என்னுடைய நண்பர்கள் தான் என்னை பழக்கப்படுத்தினார்கள். இதற்கு முற்றிலும் என்னுடைய நண்பர்கள் தான் காரணம் என்று நான் சொல்ல மாட்டேன்.
வெட்கமில்லாமல் சொன்ன விஷயம்..
இதற்கு காரணம் என்னவென்றால் பல படங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நடிக்கும் பொழுது குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகளில் படுக்கை அறை காட்சிகளில் நடக்கும் பொழுது ஒரு விதமான பயம், தயக்கம் இருக்கும்.
அந்த நேரத்தில் மது போதையில் இருந்தால் அந்த பயம் இருக்காது. மேலும் அந்த காட்சி தத்துரூபமாக வரும்.
அத்துடன் இயக்குனர் சொல்வதை கரெக்டா பண்ண முடியும். இதன் காரணமாக தான் நான் மது பழக்கத்தை என்னுடைய நடிப்பு தொழிலுக்காக ஆரம்பித்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் மதுபக்கம் என்னை அடிமைப்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் இந்த பழக்கம் காரணமாக எனக்கு புற்று நோய் வந்தது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்த நான் மது பழக்கத்தில் இருந்தும் மீண்டு வந்து தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
எனவே மதுப்பழக்கம் எதற்கும் ஒரு தீர்வாகாது என நன்கு புரிந்து கொண்டேன் என பதிவு செய்திருக்கிறார் நடிகை மனிஷா கொய்ராலா.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் மதுவினால் ஏற்படும் தீமையை மிகச் சிறப்பான முறையில் மனிஷா கொய்ராலா விளக்கி இருப்பது பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என சொல்லி இருக்கிறார்கள்.
எனவே இது போல தீய பழக்க வழக்கங்களில் தன்னை செலுத்தி வரும் இளைஞர்கள் மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கையை முன்னுதாரணமாகக் கொண்டால் கட்டாயம் இது போன்ற கெட்ட நடவடிக்கைகளில் இருந்து வெளி வந்து ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்யலாம்.