குடிச்சா தான் படுக்கையில் அதை பண்ண முடியும்.. மனிஷா கொய்ராலா ஓப்பன் டாக்..!

1970-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி நேபாளத்தில் பிறந்த மனிஷா கொய்ராலா ஒரு மிகச்சிறந்த நேபாளிய இந்திய நடிகை ஆவார். இவர் பல ஹிந்தி திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார்.

நடன கலைஞரான இவர் பரதநாட்டியம், மணிபூரி போன்ற நடனங்களை நன்கு கற்று அறிந்தவர். இவரது முதல் படமான சௌடாகர் திரைப்படம் 1991-இல் வெளி வந்தது.

நடிகை மனிஷா கொய்ராலா..

1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மனிஷா கொய்ராலா பாலிவுட்டில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் மணிரத்தினத்தின் மூலம் பம்பாய் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.

இந்தப் படத்தில் உயிரே உயிரே பாடலுக்கு இவர் கொடுத்திருந்த எக்ஸ்பிரசன்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் தமிழக இளைஞர்களின் மனதில் இவருக்கு என்று ஒரு தனி இடமும் கிடைத்தது.

தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்திய மனிஷா கொய்ராலா இந்தியன், முதல்வன், ஆளவந்தான் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை தென்னிந்திய அளவில் அதிகரித்துக் கொண்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு மொழியிலும் நடித்து இருக்கக்கூடிய இவர் வெப் சீரியலையும் விட்டுவிடவில்லை. குறிப்பாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான வெப் தொடரான ஹிரமண்டி தொடரில் நடித்து மக்களின் வரவேற்பை பெற்றார்.

புற்றுநோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இவர் பணம் இருந்தும் தனக்கு உறுதுணையாக இருந்து உதவ உறவுகள் யாரும் இல்லை என்று பேட்டி ஒன்றில் சொல்லி பலரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

இதனை அடுத்து தற்போது புற்றுநோயின் தாக்கத்திலிருந்து வெளி வந்திருக்கும் இவர் அண்மை பேட்டியில் கூறிய விஷயம் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியது.

குடிச்சா தான் படுக்கையில அத பண்ண முடியும்..

இதற்கு காரணம் திரையில் நடிக்க வந்த புதிதில் இவர் நடிக்கக்கூடிய படுக்கையறை காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது ஒரு விதமான தயக்கம் ஏற்பட்டதாகவும், இந்த தயக்கம் சிறிது பயத்தையும் அவரும் ஏற்படுத்தி இருந்ததாகவும் கூறினார்.

மேலும் நடிகர்களுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் பொழுது எனக்கு அளவுக்கு அதிகமான தயக்கம் மற்றும் வெட்கம் இருந்தது. இதனால் ஒரே காட்சியை பலமுறை டேக் எடுக்க வேண்டி இருந்தது. இதனால் எனக்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த பட குழுவுக்கும் சிரமம் ஏற்பட்டது.

அத்துடன் படுக்கையறை காட்சியில் நடிப்பது என்னவோ ஒரு அலாதியான மகிழ்ச்சியான விஷயம் என்று காட்சிகளை பார்க்கும் போது உங்களுக்கு தெரியலாம்.

ஆனால் சுற்றி 20 பேரை வைத்துக்கொண்டு ஒரு நடிகருடன் ரொமான்ஸ் காட்சிகளில் ஈடும் போது எவ்வளவு தர்ம சங்கடமான சூழ்நிலையாக இரண்டு நடிகர்களுக்கும் இருக்கும் என்பதையும் அதைத் தாண்டி இருவரும் எந்த ஒரு மோசமான முகபாவனத்தையும் காட்டாமல் அந்த காட்சியை சிறப்பாக நடித்து முடிக்க வேண்டும் என்பதையும் யோசித்துப் பார்த்தால் உண்மை என்ன என்பது உங்களுக்கு தெரிந்து விடும்.

அந்த அளவுக்கு ஒரு மோசமான அனுபவமாக அந்த காட்சிகளை படமாக்கும் போது நடிக்கக்கூடிய நடிகர் நடிகைகள் இருவருக்குமே அப்படித்தான் இருக்கும்.

அப்படிப்பட்ட காட்சிகளில் பயத்தை விடுத்து நடிக்க என்ன வழி என்று யோசித்த போது நண்பர்களின் அறிவுரைப்படி சிறிதளவு மதுவினை அருந்தி நடித்த போது அந்த பயமும் கூச்சமும் தனக்கு ஏற்படவில்லை என சொன்னார்.

அப்படியான நேரத்தில் அந்த தயக்கம், வெட்கம் ஆகியவற்றை போக்குவதற்காக குடிக்க ஆரம்பித்தேன். குடித்தால் தான் படுக்கையில் ரொமான்ஸ் காட்சிகளை செய்ய முடியும் என்ற சூழ்நிலைக்கு அழைத்து  செல்லப்பட்டேன்.

இந்த பழக்கம் அப்படியே அதிகரித்து நாள்தோறும் குடிப்பதற்கு ஆரம்பித்து விட்டேன் அதன் பயனாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன்

ஓப்பன் டாக் அதிர்ச்சி..

அதிலிருந்து போராடி மீண்டெழுந்த போது எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாமல் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதை சொல்வதற்கு எனக்கு தயக்கம் கிடையாது.

ஏனென்றால் சாதாரணமாக ஆரம்பிக்கக் கூடிய தீய பழக்கங்கள் உங்களுடைய மோசமான எதிர்காலத்திற்கான வழி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் கூறுகிறேன்.

எனக்கு கிடைத்த மருத்துவ சிகிச்சைகள்.. எனக்கு கிடைத்த பண வசதி எல்லோருக்கும் கிடைக்குமா..? என்பதை என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அவ்வளவு பணத்தை கேன்சரில் இருந்து வெளி வர செலவு செய்திருக்கிறேன்.

இது யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். எனவே போதை பழக்கங்கள்.. உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய தீய பழக வழக்கங்களிலிருந்து நம்மை நாம் விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார் நடிகை மனிஷா கொய்ராலா.

அத்தோடு மது குடிப்பதால் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது என்பதை நாசுக்காக சொன்ன மனிஷா கொய்ராலா மது பழக்கத்தால் தனது அற்புதமான வாழ்க்கையை இழந்ததாகவும் கூறியிருக்கிறார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் இது போலத்தான் பல நடிகைகள் குடித்துவிட்டு படுக்கையறை காட்சிகளிலும் முத்த காட்சிகளிலும் நடிக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்ப வைத்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version