நேபாள நாட்டைச் சேர்ந்த மனிஷா கொய்ராலா தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனது நடிப்புத் திறமையை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்துவதின் மூலம் இளைஞர்கள் விரும்பும் கனவு கன்னியாக திகழ்ந்தார்.
தமிழைப் பொருத்தவரை மனிஷா கொய்ராலா மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த பம்பாய் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். இந்தப் படத்தில் இவர் நடித்திருந்த நடிப்பை பார்த்து இவரை உருகி, உருகி பல இளைஞர்கள் காதலித்தார்கள் என கூறலாம். அது மட்டும் அல்லாமல் மனிஷா கொய்ராலா போல காதலி வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.
தன் அழகால் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்ட மனிஷா கொய்ராலா கமலஹாசனின் இந்தியன், ரஜினியின் பாபா, அர்ஜுன் நடிப்பில் வெளி வந்த முதல்வன் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் அதிகமாக நடித்தவர். 2010 ஆம் ஆண்டு சாம்ராட் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து பெற்றுவிட்டார். விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் சற்று கவனத்தை செலுத்தினார்.
இந்நிலையில் இவர் அண்மையில் தந்த பேட்டி ஒன்றில் படுக்கை அறை காட்சிகளில் நடிக்கும் போது இதைப் போடுவேன் என்று ஓபனாக கூறிய விஷயம் தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.
அடடா.. ரொமான்ஸ் காட்சிகள் மட்டும் அல்லாமல் படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் போது நடிகை மனிஷா கொய்ராலா ஒரு பிக் போட்டுக் கொள்வேன் என்று கூறி இருப்பதில் அவர் மதுவுக்கு அடிமையாகி இருக்கின்ற விஷயத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி விட்டது.
திரைப்படங்களில் நடிக்க வந்த ஆரம்ப காலங்களில் எந்த பயமும் இல்லாமல் இது போன்ற காட்சிகளில் நடிப்பதற்காக ஒரு பிக் அடிக்க ஆரம்பித்த இவர் நாள் செல்ல செல்ல குடிப்பதை அதிகரித்துக் கொண்டார்.
இதனால் மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்ட காரணத்தால் இவருக்கு கேன்சர் நோய் பாதிப்பும் ஏற்பட்டது. இதனை அடுத்து பலவிதமான சங்கடங்களை சந்தித்து கேன்சர் நோயிலிருந்து விடுதலை பெற்று வந்ததாக ஓப்பனாக பேசியிருக்கிறார்.
இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இவ்வளவு ஃபேமஸான நடிகை மதுவுக்கு அடிமையான காரணத்தால் தேவையில்லாத உயிர் கொள்ளும் வியாதியை வரவழைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அதனால் எவ்வளவு துன்பத்திற்கு ஆளாக இருக்கிறார்.
எனவே யாரும் மது பழக்கத்திற்கு அடிமை ஆகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மன ஆரோக்கியமும் பேணப்படும் என பேசி வருகிறார்கள்.