பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட்.. நடிகைகளின் Code Word இது தான்… மனிஷா கொய்ராலா

பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. அதே சமயம் அவர் தமிழ் சினிமாவிலும் மிகப் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட மனிஷா கொய்ராலாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

1989 முதலே பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார் மனிஷா கொய்ராலா. ஆனால் தாமதமாக 1995ல் தான் தமிழில் முதன்முதலில் பாம்பே என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் மனிஷா கொய்ராலா. அந்த திரைப்படத்திற்கு நிறைய வரவேற்புகள் கிடைத்தது.

தமிழில் அறிமுகம்:

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பாம்பே திரைப்படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழில் பெரிய இயக்குனர்கள் திரைப்படங்களில் எல்லாம் மனிஷா கொய்ராலாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார் மனிஷா கொய்ராலா. அதனை அடுத்து ஷங்கர் அவர் இயக்கிய முதல்வன் திரைப்படத்திலும் இவரைதான் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.

1998 இல் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த திரைப்படம் தில் சே. இந்த திரைப்படத்திற்கு இந்திய அளவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழில் உயிரே என்கிற பெயரில் இந்த படம் வெளியானது. இந்த திரைப்படம் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆகும்.

முதல்வன் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் மனிஷா கொய்ராலாவிற்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பு அவர் நடித்த எல்லா திரைப்படமும் பெரும் இயக்குனர்களின் திரைப்படங்களாகவும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களாகவும் இருந்ததால் தமிழில் அனைவராலும் அறியப்படும் நடிகையாக மனிஷா கொய்ராலா மாறினார்.

மார்க்கெட் குறைவு:

அதற்குப் பிறகு ஆளவந்தான் பாபா மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். இருந்தாலும் அவர்க்கு அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பேtடி ஒன்றில் பேசிய மனிஷா கொய்ராலா சில சர்ச்சையான விஷயங்களை பேசி இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் நடிகைகள் குறித்து பேசினார். எனக்கு தெரிந்து பல நடிகைகள் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்த எக்கச்சக்கமான நடிகைகள் அதில் உண்டு.

ஆனால் அவர்கள் எல்லாம் பேட்டியில் பேசும் பொழுது பட வாய்ப்புக்காக நான் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ததே கிடையாது. என்னிடம் யாரும் அப்படி நடந்து கொண்டதும் கிடையாது என்று கூறுகிறார்கள். அவர்கள் ஏன் அப்படி கூறுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

ஒன்று இரண்டு பேர் அப்படி கூறினால் பரவாயில்லை. நிறைய பேர் எனக்கு தெரிந்து பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்திருக்கிறார்கள். ஆனால் வெளியில் அதை கூறுவதற்கு பயப்படுகிறார்கள்.

அது எப்படி அனைவரும் அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு பட வாய்ப்புக்காக அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஒருவேளை இதுதான் நடிகைகளின் கோட் வேடாக இருக்குமோ என்று கூட எனக்கு சில நேரங்களில் தோன்றியது உண்டு என்கிறார் மனிஷா கொய்ராலா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version