கூவம் பகுதியில் வாழும் மக்கள் இப்படித்தான்…” அனுபவம் பகிர்ந்து மனிஷா யாதவ்..!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் நடிகை மனிஷா யாதவ் இடையே நிகழ்ந்த பிரச்சினைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதங்கள் நடைபெற்றது.

சீனு ராமசாமிக்கு தக்க பதிலடி கொடுத்த மனிஷா யாதவை பலரும் பல்வேறு வகைகளில் பாராட்டி இருந்தார்கள். இந்நிலையில் மனிஷா ஒரு குப்பை கதை படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்திற்காக எம்ஜிஆர் சிவாஜி அகாடமி விருதினை பெற்றிருக்கிறார்.

மேலும் மனிஷா யாதவ் அந்த படத்தில் படப்பிடிப்பு நடந்த பகுதிகளில் என்ன நடந்தது. அங்கிருக்கும் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது போன்ற விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

குறிப்பாக இந்த படத்திற்காக கூவம் பகுதியில் 60 லிருந்து 80 நாட்கள் நேரடியாக தங்கி இருந்து ஷூட்டிங் செய்து இருக்கிறார்கள். அந்த சமயத்தில் கொசுக்கள் மூலம் அதிக தொல்லை ஏற்பட்டதாக மனிஷா யாதவ் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய பகுதி என்பதால் தொடர்ந்து ஷூட்டிங் செய்ய முடியாமல் இடைவெளி விட்டு தான் படப்பிடிப்பு நடந்ததாக கூறிய அவர் அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இதில் கூவம் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் மிகவும் சந்தோஷமாகவும், கலகலப்பாகவும் ஒவ்வொரு நாளும் அவர்களது வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வருவதாக கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து சிறப்பாக வாழ்வதற்கு பணம் ஒரு முக்கியமான ஒன்று அல்ல என்பதை தான் உணர்ந்து கொண்டதாகவும், எவ்வளவோ கமிட்மெண்டுகள் நமக்குள் ஒவ்வொரு நாளும் உருவாகும் போது நாம் டென்ஷனாக தான் வாழ்கிறோம்.

அவர்கள் எப்படி, இப்படி ஜாலியாக இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். தினமும் கிடைப்பதை வைத்து சந்தோஷமாக இவர்கள் இருப்பதைப் பார்த்து சில நேரங்களில் பொறாமைப்பட்டதாகவும் கூறி இருக்கிறார்.

இந்தப் படம் ஷூட்டிங் இன் போது அங்கு இருந்த மக்கள் அவரிடம் மிகச் சிறப்பான முறையில் பழகியதாகவும், அன்பை காட்டியதாகவும் கூறியிருக்கும் மனிஷா யாதவ் இந்த படத்தில் நடித்தது இவருக்கு நிறைய அனுபவங்களை கற்றுத் தந்திருப்பதாக கூறியிருக்கிறார்.

மேலும் ஏழை எளிய மக்கள் என்றாலும் அனைவரோடு அன்பாக பழகக்கூடிய குணம் படைத்த இவர்களோடு பழகியது ஒரு சிறந்த அனுபவமாகவும், சில விஷயங்களை கற்றுக் கொள்ள கூடிய வகையில் இருந்ததாகவும், மனிஷா கூறிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆகிவிட்டது.

இதனை அடுத்து அனைவரும் சமம் என்ற ரீதியில் இந்த படம் எனக்கு ஒரு உண்மையை கற்றுத் தந்துள்ளது என்பதை மறக்க முடியாது எனக் கூறிய விஷயம், தற்போது வைரலாக இணையங்களில் பரவி ரசிகர்களின் இதயத்தை அடைந்து விட்டது.

அடுத்து அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் எப்படி இருப்பார்கள் என்று அனுபவத்தை மிக நேர்த்தியான முறையில் பகிர்ந்திருக்கிறார். எனவே இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்களைப் பற்றி இது வரை தவறாக நினைத்தவர்களின் எண்ணத்தை மாற்றக்கூடிய வகையில் இவரது பேச்சு இருந்தது என கூறலாம்.

மேலும் பணம் இருந்து என்ன பயன்.. மகிழ்ச்சியாக இருப்பது தானே மனித வாழ்க்கையின் சிறப்பு என்பதை பலரும் உணர்ந்து கொள்வார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *